சட்டத்தின் மீதும், சகோதரத்துவத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் மனம் வருந்துவர் - அசாதுதின் ஒவைசி எம்.பி.,

அசாதுதின் ஒவைசி

 • Share this:
  ’சட்டத்தின் மீதும் சகோதரத்துவத்தின் மீதும் பன்முகத் தன்மையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் யாராயினும் அவர்கள் ஒவ்வொருவரும் இந்த முடிவால் இன்று நிச்சயமாக மனம் வருந்துவர்’ என பாபர் மசூதி இடுப்பு தீர்ப்பைக் குறித்து தெரிவித்துள்ளார் லோக் சபா எம்.பி அசாதுதின் ஒவைசி.


  "சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் நீதித்துறையில் ஒரு கறுப்பு தினம். நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி, சிவில் டிஸ்ப்யூட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, ஆங்கிலத்தில் கூற வேண்டுமானால், 'It is an agrarius violation of rule of law' என்று சொல்லியிருந்தது. அது மட்டுமல்ல, 'calculated act of destroying a public place of worship.' என்றும் சொல்லியிருந்தது.


  உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு முற்றிலும் எதிராக இன்று இந்த முடிவு வெளியாகியுள்ளது.


  "அத்வானியின் ரத யாத்திரை இந்தியாவில் எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் ரத்த ஆறு ஓடியது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், சொத்துக்கள் அழிக்கப்பட்டன, வம்சங்கள் அழிக்கப்பட்டன, சேதம் ஏற்பட்டது. இன்று சிபிஐ நீதிமன்றம் இது திட்டமிடப்பட்டது இல்லை என்று தீர்ப்பு கூறுகிறது.   மசூதி இடிக்கப்பட்ட போது இனிப்பு வழங்கி மகிழ்ச்சி பரிமாறப்படவில்லையா? இதை உலகம் பார்க்கவில்லையா? எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி இவர்கள் அனைவரும் இனிப்புகள் உண்டு மகிழ்ந்தனர்.


  சிபிஐ குற்றப்பத்திரிகையில், டிசம்பர் 5-ஆம் தேதி இரவு அத்வானி, வினய் கட்டியார் வீட்டில் கூடிச சதித் திட்டம் தீட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பொய்யா? அத்வானி, கல்யாண் சிங்கிடம், மசூதி இடிக்கப்படும் வரை நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டாம், அப்போது தான் அரசு கலைக்கப்படாது என்று கூறவில்லையா? மசூதியைப் பாதுகாப்பதாக பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி அளிக்கவில்லையா? என்னைப் பொருத்தவரை, இந்த தீர்ப்பு இந்துத்துவவாதிகளைத் திருப்திப்படுத்தும்” என கூறினார்.
  Published by:Gunavathy
  First published: