விவசாய சட்டங்களை எதிர்ப்பவர்களால் அதில் ஒரு குறைபாட்டை கூட சுட்டிக்காட்ட முடியவில்லை - மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

"உலகத்திற்கே தெரியும் விவசாயம் தண்ணீரால் நடைபெறுகிறது என்று. காங்கிரஸால் மட்டுமே ரத்தத்தால் விவசாயம் செய்ய முடியும்” என்று அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

  • Share this:
வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு மாநிலத்தில் மட்டுமே போராட்டம் நடைபெறுவதாகவும், அவர்கள் தூண்டுதலின் பேரில் போராடி வருவதாகவும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.

மாநிலங்களவையில் நரேந்திர சிங் தோமரின் கருத்துக்கள் பஞ்சாபிலிருந்து விவசாயிகள் தலைமையிலான தேசிய தலைநகரின் எல்லைகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களைக் குறிப்பிடுகின்றன.

டெல்லி விவசாயிகள் போராட்டம்


மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி அருகே விவசாயிகள் 72 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். கடும் பணி, மழை என பார்க்காமல் டெல்லி செல்லும் சாலைகளை மறைத்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த மாதம் குடியரசு தினத்தன்று போராட்டத்தின் ஒரு அங்கமாக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி நாட்டையே அதிர வைத்தது. டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியதில் விவசாயிகளின் ஒரு தரப்பினரும், காவல்துறையினரும் பல்வேறு இடங்களில் மோதிக்கொண்டனர். இதனிடையே டெல்லியில் உள்ள செங்கோட்டையை அடைந்த விவசாயிகள் அங்குள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில் சீக்கிய மத கொடியை ஏற்றினர். இந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.

இந்நிலையில் ராஜ்யசபாவில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக காரசார கருத்துக்களை கூறியிருக்கிறார்.

“வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு மாநிலத்தில் மட்டுமே போராட்டம் நடைபெறுகிறது. விவசாயிகள் தூண்டப்பட்டிருக்கின்றனர். விவசாய சங்கங்களாலும், எதிர்கட்சிகளாலும் வேளாண் சட்டங்களில் ஒரு குறைபாட்டை கூட சுட்டிக்காட்ட முடியவில்லை. மத்திய அரசும், பிரதமர் மோடியும் விவசாயிகளின் நலனுக்காக உறுதி பூண்டுள்ளனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்


நாங்கள் கவுரவத்தில் நிற்கவில்லை. இந்தச் சட்டத்தில் என்ன குறைபாடு என்று நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம், யாரும் வரவில்லை

உலகத்திற்கே தெரியும் விவசாயம் தண்ணீரால் நடைபெறுகிறது என்று. காங்கிரஸால் மட்டுமே ரத்தத்தால் விவசாயம் செய்ய முடியும்” என்று அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
Published by:Arun
First published: