7 பேர் விடுதலை விவகாரம் - அற்புதம் அம்மாள் உடன் அமித்ஷாவை சந்தித்தார் திருமாவளவன்

”பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்”

news18
Updated: July 29, 2019, 1:10 PM IST
7 பேர் விடுதலை விவகாரம் - அற்புதம் அம்மாள் உடன் அமித்ஷாவை சந்தித்தார் திருமாவளவன்
அமித்ஷா - திருமாவளவன் சந்திப்பு
news18
Updated: July 29, 2019, 1:10 PM IST
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் உரிய முடிவெடுக்க வலியுறுத்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, திருமாவளவன் இன்று சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

தமிழக அரசியல் கட்சிகள் பல முறை வலிறுத்தியும் இது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை. இவ்விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க நளினி தொடர்ந்த வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இந்த நிலையில், எழு பேர் விடுதலை தொடர்பாக கோரிக்கை விடுப்பதற்காக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உடன், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் ரவிக்குமார் எம்.பி.யும் உடன் இருந்தார்.

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...