கடும் குளிரில் இருந்து பசு மாடுகளை காப்பாற்ற ஸ்வெட்டர்... நிதி ஒதுக்கிய அயோத்தி நகராட்சி நிர்வாகம்...!

கடும் குளிரில் இருந்து பசு மாடுகளை காப்பாற்ற ஸ்வெட்டர்... நிதி ஒதுக்கிய அயோத்தி நகராட்சி நிர்வாகம்...!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 25, 2019, 9:53 AM IST
  • Share this:
கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசு மாடுகளுக்கு கம்பிளி வாங்க அயோத்தி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பசு மாடுகளுக்கு அதீத முக்கியத்துவம் தரப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் பைசிங்பூரில் முதற்கட்டமாக ஆயிரத்து 200 மாடுகளுக்கும், 700 காளைகளுக்கும் கம்பிளி, கையுறைகளை வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோணிப்பை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்று 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பசு மாடுகள் கடும் குளிரையும் சமாளிக்கும் வகையில் மூன்று அடுக்காக கோணி பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளன.


அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குளிரில் வாடும் பள்ளி மாணவிகளுக்கு ஸ்வெட்டர் வாங்கிக்கொடுக்காத மாநில அரசு, தற்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் கொடுக்க முன் வருகிறது என்று விமர்சித்துள்ளது.

Also see...
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading