ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொரோனா குறைந்ததால், ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு; 6 முதல் 12 வரை வகுப்புகள் நடக்கும்!

கொரோனா குறைந்ததால், ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு; 6 முதல் 12 வரை வகுப்புகள் நடக்கும்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என உத்தரகாண்ட் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

  முதல் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து ஒருசில மாநிலங்களில் பள்ளிகள்,கல்லூரிகள் ஆகியவை திறக்கப்பட்டன. எனினும் உடனடியாக இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஆன் லைன் மூலம் வகுப்புகளை பயின்று வருகின்றனர். கொரோனா காரணமாக இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ரத்து செய்துள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தற்போது இந்தியாவில்  தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில்  கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: ஐஐடி மெட்ராஸின் பெயர் மாற்றப்படுகிறதா? - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்!

  பள்ளிகளில் திறக்கப்பட்டாலும் வருகைப் பதிவு எனப்படும் அட்டண்டென்ஸ் கட்டாயம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. எனினும், முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: ஓடும் ரயிலில் சிக்கிய பயணி; நொடிப் பொழுதில் மீட்ட காவலர் !

  பள்ளிகளை திறக்க திட்டமிட்டால் முதலில் மழலையர்களுக்கான வகுப்புகளை திறக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு பெரியவர்களை விட வைரஸுக்கான எதிர்ப்பு சக்தி அவர்களிடம் அதிகமாக உள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா உட்பட பல்வேறு மருத்துவர்களுக்கு ஆலோசனை  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Corona, School Reopen, Students