• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஜாதகம் அடிப்படையில் மாணவர் சேர்க்கை.. அரியவகை பள்ளி.. வித்தியாசமான கற்பித்தல் முறை!

ஜாதகம் அடிப்படையில் மாணவர் சேர்க்கை.. அரியவகை பள்ளி.. வித்தியாசமான கற்பித்தல் முறை!

Vedic School

Vedic School

16 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி பயிலுகின்றனர், சிலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இங்கு மாணவர்கள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும்.

  • Share this:
இந்த பள்ளியில் மாணவர்களுக்கு அட்மிஷன் வாங்க வேண்டுமென்றால் சாதி, மதம் தேவையில்லை ஆனால் ஜாதகம் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் இங்கு அட்மிஷனே நடைபெறுகிறது.

பொதுவாக ஒரு பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கென பல்வேறு விதிகள் முறைகள் இருக்கும். சில பள்ளிகள் வயதை தகுதியாக கொண்டிருக்கும், மதம், சாதி என்ன என்றெல்லாம் கூட பார்ப்பார்கள், தகுதிக்காக பல்வேறு சான்றிதழ்களையுய் கேட்பார்கள், அவ்வளவு ஏன் பணம் கொடுத்தால் தான் அட்மிஷன் என கூறும் பள்ளிகளும் இருக்கின்றன. ஆனால் ஜாதகத்தை கொண்டு வந்தால் தான் அட்மிஷன் என கூறும் பள்ளி குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குஜராத்தில் தான் அப்படியொரு பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. தனக்கென பிரத்யேக அடையாளம், செயல்பாடுகளை கொண்டிருக்கும் அந்த பள்ளி குறித்து அறிந்து கொள்வோம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சபர்மதி எனும் பகுதியில் இருக்கும் ஹேம்சந்திராச்சார்யா சமஸ்கிருத பாடசாலை தான் நாம் பார்க்கவிருக்கும் அந்த அபூர்வ பள்ளி. இங்கு தான் பண்டைய முறையிலான ஜாதகம் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக அந்த பள்ளியின் நிர்வாகியான அகில் உத்தம் ஷா என்பவர் தெரிவித்தார்.

Also Read:  ஆண்டுக்கு 1 லட்சம் பேர் மரணத்துக்கு காரணமான ரசாயனம் – ஒரு ஷாக் ரிப்போர்ட்!

இது குறித்து அந்த பள்ளியின் நிர்வாகியான அகில் உத்தம் ஷா கூறுகையில், நாலந்தா, தக்‌ஷஷீலம் போன்ற பழங்கால கற்பித்தல் முறைகளை மீண்டும் கொண்டுவருவது தான் எங்களின் குறிக்கோளாக இருக்கிறது.

எங்கள் பள்ளியில் வேதங்கள் படிப்பது, ஜாதகம் பார்த்தல், ஆயுர்வேதம், மொழி, இலக்கியம், கணிதம், வேத கணிதம், யோகா, இசை, குதிரையேற்றம், சட்டங்கள், வாஸ்து, தடகளம் போன்ற பல்வேறு கலைகள் கற்றுத்தரப்படுகின்றன. இங்கு பயில விரும்பும் மாணவர்கள் அட்மிஷன் பாரத்தை நிரப்பித் தர வேண்டும், அவர்களின் ஜாதகத்தை பார்ப்போம், ஒரு 15 நாள் சோதனைக்கு பிறகு அவர்களை சேர்த்துக்கொள்வோம். அவர்களிடமிருந்து 3,000 ரூபாயை கட்டணமாக வசூலிப்போம்.

also read:  குட்கா எச்சில் கறைகளை சுத்தம் செய்ய பலநூறு கோடிகளை செலவிடும் ரயில்வேதுறை!

இந்த பள்ளியில் தற்போது 100 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 7 முதல் 12 வயதுடைய மாணவர்கள் சேர்க்கைக்கு தகுதியானவர்கள், இங்கு சுமார் 10 முதல் 12 ஆண்டுகளுக்கு கற்பித்தல் நடைபெறுகிறது. 16 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி பயிலுகின்றனர், சிலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இங்கு மாணவர்கள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும். இங்கு மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவை அவர்களாகவே சமைக்கவும் கற்றுத்தரப்படுகிறது. மாணவர்களுக்கு உணவு, மருத்துவம் இங்கேயே அளிக்கப்படுகிறது. வருடத்துக்கு ஒரு மாதம் விடுப்பும், மாதம் ஒரு நாள் மட்டும் பெற்றோரை சந்திக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.

also read:  முடங்கியதா ட்விட்டர்? வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டர் முடக்கம்?

இந்தப் பள்ளியானது மாநில கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை, மேலும் இவர்களிடமிருந்து சான்றிதழ்களும் கிடைக்காது. ஒரு மாணவரின் திறமையை சான்றிதழ்களினால் அளவிட கூடாது என உத்தம் ஷா கூறினார். தேசிய திறந்தநிலை பள்ளியகம் வாயிலாக இந்த பள்ளியின் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியும். இந்த முறை 10ம் வகுப்பு தேர்வுக்கு 35 மாணவர்கள் தயாராகி வருகிறார்கள்.

இந்த பள்ளியில் பயின்ற துஷார் தலாவாத் எனும் மாணவர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் வேத கணித போட்டிகளுக்காக தனது பள்ளி சார்பில் கலந்து கொண்டிருக்கிறார். மாணவர் துஷாரின் திறமையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராட்டியிருக்கிறார். இதே போல இந்த பள்ளியின் மாணவர்கள் இசை உள்ளிட்ட பிற துறைகளில் சிறந்து விளங்கியிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: