• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வசதியற்ற மாணவர்கள் உயர்கல்வி பெற உதவும் "Library Man" - 18 நூலகங்கள் அமைத்து அசத்தல்!

வசதியற்ற மாணவர்கள் உயர்கல்வி பெற உதவும் "Library Man" - 18 நூலகங்கள் அமைத்து அசத்தல்!

sanjay kacchap

sanjay kacchap

ஜார்கண்ட் மாநில நிதி அமைச்சர் ராமேஷ்வர் ஓரான், சமீபத்தில் நடந்த ஒரு சமூக விழாவில் வைத்து இவருக்கு "நூலக மனிதன்" (Library Man) என்ற பட்டத்தை வழங்கி இருக்கிறார்.

  • Share this:
ஜார்கண்ட் மாநிலத்தில் 40 வயதான சஞ்சய் கச்சப் என்பவர் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி உதவி வழங்குவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவர் அம்மாமாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டியின் (agriculture Produce Market Committee) மார்க்கெட் செக்ரெட்டரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் ஜார்க்கண்டின் கோல்ஹான் பிரிவில் ஈஸ்ட் சிங்பம், செரைகெலா கர்சவான் (Seraikela Kharsawan) மற்றும் வெஸ்ட் சிங்பம் உள்ளிட்ட இடங்களில் இதுவரை சுமார் 18 நூலகங்களை அமைத்துள்ளார். நூலகங்கள் அமைக்கும் சஞ்சய் கச்சப்பின் முயற்சிகளை பார்த்து வியந்த ஜார்கண்ட் மாநில நிதி அமைச்சர் ராமேஷ்வர் ஓரான், சமீபத்தில் நடந்த ஒரு சமூக விழாவில் வைத்து இவருக்கு "நூலக மனிதன்" (Library Man) என்ற பட்டத்தை வழங்கி இருக்கிறார்.

தான் ஒரு சிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவை கடந்த 2002-ல் கைவிட்டதாக கூறும் சஞ்சய் கச்சப், இதற்கு காரணம் உரிய கல்வி பயிற்சி எடுக்க தன்னால் முடியாமல் போனது தான் என்று கூறுகிறார். ஆனால் உயர் கல்வி படிக்க விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள் தன்னை போல வாழ்க்கை இலக்கை கைவிட்டுவிட கூடாது. அதற்கு தன்னால் முடிந்த ஏதாவது ஒன்றை செய்தாக வேண்டும் என்ற உறுதி கொண்டார். உயர்கல்வியை படிக்கச் நினைக்கும் போது தனக்கு ஏற்பட்ட அதே தடைகள் மற்றும் கஷ்டங்களை ஏழை மாணவர்கள் அனுபவிப்பதை அவர் விரும்பவில்லை.

Also Read: 500 கோடீஸ்வரர்களை உருவாக்கிய Freshworks நிறுவனம் – ரஜினிக்கு நன்றி சொல்லும் சாதனை தமிழர் கிரிஷ் மாத்ருபூதம்!

தனது நூலகங்கள் அமைக்கும் முயற்சி பற்றி சஞ்சய் கச்சப் விரிவாக கூறி இருப்பதாவது, "போட்டித் தேர்வுகளுக்கு நான் தயாரான போது, என்னைப் போன்ற பலரிடம் தேர்வுக்கு தயாராக தேவையான புத்தகங்கள் வாங்க பணம் இல்லை. இதனால் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் பலமுறை முயற்சித்தும் நிறைவேறாமல் போனது. எனவே பின்தங்கிய குடும்பத்திலிருந்து அடுத்தடுத்து வரும் தலைமுறையினர் படிக்கச் நினைத்தும் முடியாமல் போன நாங்கள் அனுபவித்த துயரங்களை எதிர்கொள்ள கூடாது. இதை சரி செய்ய என்னால் ஆன சிறிய அளவிலான படிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.

இதன் விளைவாகவே தற்போது வரை 18 நூலகங்களை அமைத்துள்ளதாக கூறி இருக்கிறார்.இந்த நூலகங்களில் 12 முற்றிலும் டிஜிட்டல் & 2 வைஃபை இணைப்பு கொண்டவை. இந்த நூலகங்களில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் UPSC தேர்வுகளுக்குத் தயாராகிறார்கள் என்றார். இந்த நூலகங்களில் பெரும்பாலானவை பயன்பாட்டில் இல்லாத சமூக மையங்கள் அல்லது பள்ளி கட்டிடங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ளன.

Also Read:   சேலை அணிந்து வந்ததால் ஓட்டலுக்குள் அனுமதி மறுப்பா? – வைரல் வீடியோ… உண்மை என்ன?

மேலும் 75% மதிப்பெண்களுக்கு மேல் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கும் பணியை பலரது உதவியுடன் செய்து வருவதாக கூறியுள்ள சஞ்சய் கச்சப், சமீபத்தில் 10-ஆம் வகுப்பில் 84% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர் ஒருவரை அறிவியல் பிரிவில் சேர்க்க முடியாமல் தடுமாறிய பெற்றோருக்கு நிதி உதவி வழங்கப்பட்டதாக கூறினார். நூலகத்திற்கு வருகை தரும் ஆர்வமுள்ள நபர்களுக்கு ஆன்லைன் வேலை ஆலோசனை வழங்கப்படுகிறது. இவர் அமைத்துள்ள நூலகங்களிலிருந்து கிடைத்த உதவியின் மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு வேலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: