அடர்ந்த காட்டின் வழியாக தினமும் 17 கி.மீ., பயணம்செய்து பழங்குடி மாணவர்களுக்கு கற்பிக்கும் கேரள ஆசிரியர்..

ஊரடங்கால் தவறவிட்ட வகுப்புகளை ஈடுசெய்ய, ஒரு கேரள ஆசிரியர் தினமும் 16 கிலோமீட்டர் தூரம் நடந்து, காட்டு விலங்குகள் நிறைந்த காடு வழியாக மேலும் ஒரு கிலோமீட்டர் தூரம் மலையேறி சென்று, பழங்குடி குழந்தைகளுக்காக தனது பள்ளியை அடைவதாக கூறப்படுகிறது.

அடர்ந்த காட்டின் வழியாக தினமும் 17 கி.மீ., பயணம்செய்து பழங்குடி மாணவர்களுக்கு கற்பிக்கும் கேரள ஆசிரியர்..
மினி கோர்மன் (படம்: நன்றி - நியூஸ் மினிட்)
  • News18
  • Last Updated: October 16, 2020, 1:14 PM IST
  • Share this:
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மார்ச் முதல் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால், இந்த கல்வியாண்டு பாடங்களை மாணவர்கள் சரிவர பயில முடியாமல் போனது. தற்போது, மாணவர்கள் வீட்டிலிருந்த படியே கல்வி பயிலும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் பார்த்தோமானால் ஆன்லைன் வகுப்புகள் என்பது சில மாணவர்களுக்கு ஆடம்பரமான ஒன்றாகத்தான் உள்ளது. அந்த வகையில், ஊரடங்கால் தவறவிட்ட வகுப்புகளை ஈடுசெய்ய, ஒரு கேரள ஆசிரியர் தினமும் 17 கிலோமீட்டர் தூரம் நடந்து, காட்டு விலங்குகள் நிறைந்த காடு வழியாக மேலும் ஒரு கிலோமீட்டர் தூரம் மலையேறி சென்று, பழங்குடி குழந்தைகளுக்காக தனது பள்ளியை அடைவதாக கூறப்படுகிறது.

மாநிலத்தில் பள்ளிகளை நடத்தி வரும் 270 ஒற்றை ஆசிரியர்களில் மினி கோர்மனும் ஒருவர். 44 வயதான இவர், மலாப்புரம் மாவட்டத்தில் உள்ள அகம்படத்திலிருந்து பழங்குடியினர் குடியேற்றமான அம்புமாலாவுக்கு கடுமையான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள் வரை தனது கிராமத்திலிருந்து நீண்ட தூரம் நடந்து செல்வது பழக்கமானதால், இவ்வளவு தூரம் நடந்து செல்வது ஒருபோதும் எனக்கு பெரிய விஷயமல்ல என்று மினி ஆசிரியர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஆசிரியர் தனது பயணத்தை பற்றி கூறியது, பள்ளிக்கு செல்லும் வழியில் புலி குட்டிகள், மலைப்பாம்பு, காட்டுப்பன்றிகள் போன்றவற்றை அடிக்கடி பார்த்திருக்கிறாராம். பெரும்பாலும், மினி தனது பள்ளியின் கிராமமான அம்புமாலாவில் சில சமயம் தங்க வேண்டுயிருந்தது. ஏனெனில் வெள்ளம் ஏற்படும்போது காடு வழியாகச் செல்லும் நதி நிரம்பி வழிகிறது.


அதனால் அடர்ந்த புதர்களுக்கு மத்தியில் அவரால் நடக்க இயலாது எனக்கூறினார். மற்ற நாட்களில் அவர், ஆற்றின் குறுக்கே போடப்பட்டிருக்கும் ஒரு மூங்கில் பாலம் வழியாக செல்வார். இந்த பாலம் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இரண்டு முறை அழிக்கப்பட்டதாக கூறினார்.

Also read... Amazon Great Indian Festival தொடங்கியது: அட்டகாசமான மொபைல்போன்களின் அதிரடி ஆஃபர்கள்..முன்னதாக, ஒரு குறிப்பிட்ட பகுதி வரை செல்ல பஸ் இருக்கும். ஆனால் தற்போது போக்குவரத்தின் சீரற்ற பாதையில் அவரை நடந்து செல்லும் நிலைக்கு தள்ளியது. இந்த பிராந்தியத்தில் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்களின் நன்மைகளை எளிதாக்குவதற்கும் விரிவாக்குவதற்கும், பட்டியல் பழங்குடியினரின் உரிமைகளுக்காக மினி ஆசிரியர் ஒரு கொடி ஏந்தியவர் என்று கூறலாம். அவர் பள்ளியின் ஒரே ஆசிரியராக இருப்பதற்கான ஒப்பந்த அடிப்படையிலான திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டில் ஆரம்பித்தார்.இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், ஒடிசாவில் சேர்ந்த வயதான மனிதர், அவரின் உணர்ச்சிமிக்க செயலால் ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக வெளிப்பட்டார். இந்த முதியவர் பெயர் நந்தா பிரஸ்டி, குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மாநிலத்தின் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பெரியவர்களுக்கும் பாடம் கற்பிக்கிறார். அவர் பார்தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர், கடந்த 75 ஆண்டுகளாக அரசாங்கத்தின் எந்த உதவியும் இன்றி தொடர்ந்து பாடம் கற்பித்து வருகிறார்.

அவர் ஆறுதலுடன் கற்பிக்கக்கூடிய ஒரு உள்கட்டமைப்பை உருவாக்க அரசாங்க உதவியைப் பெறுமாறு கிராம சர்பஞ்ச் அவரிடம் கோரியுள்ளார். ஆனால் அந்த கோரிக்கை தொடர்ந்து மறுத்து வருகிறார். அவர் ஒரு பழைய மரத்தின் கீழ் உட்கார்ந்து தனது வேலையைத் தொடரவே விரும்புவதாக கூறினார். எந்தவொரு மாணவரிடமிருந்தும் அவர் ஒருபோதும் தனது சேவைக்கு கட்டணம் வசூலிப்பதில்லை.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading