ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஸ்பிரைட், பெப்சிதான் குடிப்பேன்.. ஒரு கிராம மக்களின் செல்ல பிள்ளையாக மாறிய 'கேசு'

ஸ்பிரைட், பெப்சிதான் குடிப்பேன்.. ஒரு கிராம மக்களின் செல்ல பிள்ளையாக மாறிய 'கேசு'

கேசு என்ற காகம்

கேசு என்ற காகம்

kerala | காகத்தை செல்ல பிராணியாக வளர்க்கும் இளைஞர். காரணம் என்ன தெரியுமா?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல், கைப்பள்ளி பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருபவர் வினோத். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக சாலையில் நின்ற தென்னை மரத்தை வெட்டி உள்ளார். அதில் காகம் ஒன்று கூடு வைத்திருந்துள்ளது. அந்த கூட்டினுள் மூன்று காகத்தின் குஞ்சுகளும் இருந்துள்ளன.கீழே விழுந்ததில் காகத்தின் இரண்டு குஞ்சுகள் இறந்துள்ளன. ஒரு குஞ்சு மட்டும் மூச்சு விட்டபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது.

இதைப் பார்த்து பொறுத்து கொள்ள முடியாத வினோத் அந்த காகத்தின் குஞ்சை எடுத்து தண்ணீர் கொடுத்து உயிரை காப்பாற்றி - அட்டைப்பெட்டிக்குள் அதற்கென வீடு அமைத்து உணவளித்து பத்து மாதமாக தனது கடைக்குள் வைத்து பராமரித்து வந்துள்ளார். இந்த பத்து மாதத்துக்குள் காகமும் - வினோத்தும் மிகவும் ஐக்கியமாகி விட்டனர்.

இதைத் தொடர்ந்து அந்த காகத்திற்கு கேசு என்று செல்லப் பெயரும் இட்டுள்ளார் வினோத். பின்பு இதை அறிந்த அதே பகுதியில் கடைகள் நடத்தும் நபர்கள் உட்பட அப்பகுதி கிராம மக்களும் வினோத்தின் கடைக்கு வந்து கேசு உடன் பழக துவங்கி உள்ளனர். கேசு -வும் அவர்களுடன் நெருங்கி பழக துவங்கியுள்ளது. வினோத் மாலையில் கடை அடைப்பதற்குள் அவர் அமைத்துக் கொடுத்த அட்டைப்பெட்டி வீட்டுக்குள் சென்று தங்கி விடுவதும் வழக்கமாக உள்ளது.

பின்னர் காலையில் 6 மணி அளவில் கட்டிடத்தில் உள்ள ஓட்டை வழியாக வெளியே சென்று முதலில் அங்கு மளிகை கடை நடத்தும் ஒருவரின் கடையில் செல்வதும் அங்கு அவர் அளிப்பதை சாப்பிட்டுவிட்டு, பின்பு உணவகம் நடத்தும் நபரின் கடையில் சென்று அவர் கொடுப்பதையும் சாப்பிட்டு விட்டு, இதுபோல இறைச்சி கடை நபர், முட்டை கொண்டு வருபவர் , மீன் வியாபாரி என அனைவரிடமும் பழகி அவர்கள் வழங்கும் உணவுகளை உண்டு கேசு ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார்.

Also see... 8 ஆம் நூற்றாண்டு பொன்னியின் செல்வனில் 21 ஆம் நூற்றாண்டு பொருள்கள்!

அதுபோல கேசுவுக்கு ஸ்ப்ரைட் ,7 அப் பெப்சி போன்ற குளிர்பானங்கள் மிகவும் பிடித்த உணவாம். இந்த கதைகளை தெரிந்து கேசுவை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்களும் வந்து பார்த்து செல்கின்றனர். இதனால் தனக்கும் தற்போது வியாபாரம் நன்றாக தான் நடக்கிறது எனக் கூறியுள்ளார் வினோத்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Birds, Kerala