• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘ஹலோ நான் தேஜஸ்வி யாதவ் பேசுறேன்’ - மாவட்ட நீதிபதியிடம் பீகார் எதிர்கட்சித் தலைவர் பேசும் வைரல் போன் கால் வீடியோ!

‘ஹலோ நான் தேஜஸ்வி யாதவ் பேசுறேன்’ - மாவட்ட நீதிபதியிடம் பீகார் எதிர்கட்சித் தலைவர் பேசும் வைரல் போன் கால் வீடியோ!

தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி யாதவ்

அவர்கள் போராட்டத்தின் மூலம் எதிர்ப்பதற்கான தங்கள் ஜனநாயக உரிமையை மட்டுமே பயன்படுத்த விரும்பினர். அவர்களை போராட அனுமதியுங்கள் என தேஜஸ்வி நீதிபதியிடம் கோருகிறார்,

  • Share this:
பீகாரில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், எதிர்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவால் ஆளும் நிதிஷ் குமாரை ஆட்சியில் இருந்து அகற்ற முடியவில்லை என்றாலும் அவரின் செல்வாக்கு சரியாமல் அப்படியே தான் நீடிக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் அவர் பேசிய போன் கால் வீடியோ ஒன்று உலா வருகிறது.

ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவின் மகனும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நேரில் சென்றார்.

போராட்டம் நடைபெற்று வரும் இடத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்கு தாங்கள் அனுமதிக்கப்படவில்லை எனஆசிரியர்கள் தேஜஸ்வியிடம் தெரிவித்திருக்கின்றனர். அதனையடுத்து தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி மற்றும் பாட்னா மாவட்ட நீதிபதி ஆகியோரை தொடர்பு கொண்ட தேஜஸ்வி போராட்டம் அந்த இடத்திலேயே தொடர்ந்து நடைபெறுவதற்கான ஒப்புதலை பெற்றுத்தந்துள்ளார்.

போராட்டக்களத்தில் எடுக்கப்பட்ட போன் கால் உரையாடல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் போராடி வரும் ஆசிரியர்கள் மத்தியில் நின்றுகொண்டிருக்கும் தேஜஸ்வி யாதவ், பாட்னா மாவட்ட நீதிபதியிடம் தனது தொலைபேசியில் பேசுகிறார், போராட்டக்காரர்களும் கேட்கும் விதமாக போனை ஓபன் ஸ்பீக்கரில் போட்டிருக்கும் தேஜஸ்வி, போராடி வரும் ஆசிரியர்கள் தாங்கள் தர்ணாவில் ஈடுபட அனுமதியில்லை என தெரிவிக்கிறார்கள். இங்கு லத்தி சார்ஜ் நடத்தப்பட்டிருக்கிறது, அவர்களின் உணவு தூக்கி எறியப்பட்டுள்ளது, இங்கிருந்து துரத்தப்படுகிறார்கள். இங்குள்ளவர்கள் பயத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள் போராட்டத்தின் மூலம் எதிர்ப்பதற்கான தங்கள் ஜனநாயக உரிமையை மட்டுமே பயன்படுத்த விரும்பினர். அவர்களை போராட அனுமதியுங்கள் என தேஜஸ்வி நீதிபதியிடம் கேட்கிறார்.



அதற்கு நீதிபதி, நீங்கள் என்னை கேள்வி கேட்பீர்களா என கேட்கிறார்.

‘நான் தேஜஸ்வி யாதவ் பேசுகிறேன்’ என தேஜஸ்வி அவருக்கு பதில் அளிக்கிறார்.

இவ்வாறாக பேச்சுவார்த்தை நீள்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

31 வயதே ஆகும் தேஜஸ்வி யாதவ் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியை தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வைத்திருக்கிறார். தேர்தல் பரப்புரையின் போது ஆக்ரோஷமாக அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: