• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எனக்கு இது பெரிய அடி, எனது போராட்டம் தொடரும் - பிரகாஷ்ராஜ்

எனக்கு இது பெரிய அடி, எனது போராட்டம் தொடரும் - பிரகாஷ்ராஜ்

  • Last Updated :
  • Share this:
    மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், எனக்கு இது பெரிய அடி, போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.

    2019 நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. வாக்குகள் எண்ணி இன்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

    மதியம் 2.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 344 தொகுதிகளிலும், காங்கிரஸ் 93 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 103 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    தமிழகத்தைப் பொருத்தவரை, திமுக 37 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதி தொடர்ந்து இழுபறியில் இருக்கிறது.

    தேர்தல் முடிவுகள் குறித்து பிரபலங்கள் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

    தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், ‘‘மரியாதைக்குரிய நரேந்திர மோடி ஜி. மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் சாதித்துவிட்டீர்கள்’’ என்று கூறியுள்ளார்.

    தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், ‘‘ 2019 தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2-ம் முறை பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு இதயமார்ந்த வாழ்த்து’’ என்று வாழ்த்து கூறியுள்ளார்.

    மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், ‘‘எனக்கு இது பெரிய அடி. இன்னும் பெரிய விமர்சனங்கள், கேலிகள் என்மேல் வைக்கப்படும். நான் என் நிலையிலிருந்து மாறப்போவதில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும்... நீண்டதூரம் செல்லவேண்டிய கடினமான பயணம் தொடங்கியிருக்கிறது. இதுவரை என்பால் நின்ற அனைவருக்கும் நன்றி... ஜெய்ஹிந்த்’’ என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ilavarasan M
    First published: