கமலா என்ற பெயர் வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் சலுகையை வழங்கும் தீம் பார்க்: கமலா ஹாரிஸின் வெற்றியை கவுரவிக்க முடிவு!!

கமலா ஹாரிஸ்

‘கமலா’, ‘கமல்’ மற்றும் ‘கமலம்’ ஆகிய பெயர்களை கொண்டவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும்.

  • Share this:
உங்களின் பெயர் கமலாவாக இருந்தால் உங்களுக்கு செம லக்கி சான்ஸ் காத்திருக்கிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகியுள்ளதால், அவரது வெற்றியை கொண்டாடும் வகையில் இந்தியாவில் உள்ள ஒரு தீம் பார்க் நாளை (ஜன.24) சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

தற்போது கொச்சி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இயங்கி வரும் கேளிக்கை தீம் பார்க்கான Wonderla, தங்களது தீம் பார்க்கிற்கு வருபவர்களில் கமலா என்ற பெயரைக் கொண்ட அனைவருக்கும் நாளை ஒரு நாள் மட்டும் இலவச நுழைவு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக Wonderla-வின் பேஸ்புக் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வொண்டர்லா வெளியிட்டுள்ள அந்த பதிவில்,"இந்த ஞாயிற்றுக்கிழமையில் (ஜன24) தீம் பார்க் வரும் அனைத்து கமலாக்களும் வெற்றியாளர்கள்! என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் சில விதிமுறைகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

கமலா என்ற பெயரில் உள்ள எந்த விருந்தினரும் 2021 ஜனவரி 24ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று, செல்லுபடியாகும் புகைப்பட ஐடியைக் காண்பிப்பதன் மூலம் பூங்காவிற்குள் இலவசமாக நுழையலாம் என தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பூங்காவிலும் சலுகைக்கு தகுதியான முதல் 100 விருந்தினர்களுக்கு மட்டுமே இந்த இலவச ஆஃபர் கிடைக்கிறது. இந்த சலுகை பெங்களூர், கொச்சி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள வொண்டர்லா தீம் பார்க்குகளில் மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவித்துள்ளது. கமலாவின் கீழ் வரும் பெயரின் மாறுபாடுகளில் ‘கமலா’, ‘கமல்’ மற்றும் ‘கமலம்’ ஆகிய பெயர்களை கொண்டவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும். இதுதவிர பெயரில் வேறு எந்த வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் யாரும் இந்த சலுகைக்கு தகுதி பெறமாட்டார்கள் என தெரிவித்துள்ளது.

https://www.facebook.com/Wonderla/posts/5013060178765447

தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்றுள்ள கமலா ஹாரிஸுக்கும் இந்தியர்களுக்கும் இடையே ஒரு சிறப்பான பந்தம் உள்ளது. கமலா ஹாரிஸ் அமெரிக்கவின் முதல் பெண் துணை அதிபராக ஆகியிருப்பதுடன், இந்தப் பதவியை ஏற்கும் முதல் கறுப்பினப் பெண்மணி, தென்கிழக்கு ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த அதாவது இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண்மணியும் ஆவார்.

ஹாரிஸின் தாயார், ஷியாமலா கோபாலன் (Shyamala Gopalan). இவர் தமிழ்நாட்டின் சென்னை மாநகரைச் சேர்ந்தவர். இதன் காரணமாகவே கமலா ஹாரிஸ் தேர்தலின் போது கொடுத்த பிரச்சாரத்தின் போதும், அவரது அடுத்தடுத்த வெற்றியின் போதும், அதனை ​​இந்திய மக்கள் தங்களுடைய சொந்த வெற்றியாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். ஹாரிஸுக்கும் இந்தியாவில் நிறைய நினைவுகள் உள்ளன. அதை அவர் பிரச்சாரத்தின் பொது மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பதற்கு முன்னதாக, அதாவது கடந்த புதன்கிழமையன்று கமலா ஹாரிஸின் தாத்தா பிறந்த இடமான தமிழ்நாட்டில் உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டத்தின் போது சைவ உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அன்றைய தினம் PETA India GoodDot-ல் இருந்து சைவ பிரியாணி மற்றும் புரோட்டீஸ் சங்க்ஸ் பொதிகளை அனுப்பியுள்ளது. மேலும் Good Mylk-கிலிருந்து ( சுவையான ஓட் பால், சைவ இனிப்புகள் மற்றும் சில சுவையான உணவு பொருட்களை துளசேந்திரபுரத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது. இந்த உணவு பொருட்களை PETA India சார்பாக கிராம பஞ்சாயத்து மற்றும் அதன் தொண்டர்கள் வழங்கியுள்ளனர்.
Published by:Arun
First published: