முன்னாள் காதலி/ காதலன் ஃபோட்டோவை தீயிட்டு எரித்தால் இலவச உணவு...!

காதலர் தினத்தன்று ரெஸ்டாரண்ட்டுக்கு வரும் ஜோடிக்கு இலவசமாக ஃபோட்டோ ஷூட் எடுத்து தரப்படும் என்றும் அறிவித்துள்ளது.

முன்னாள் காதலி/ காதலன் ஃபோட்டோவை தீயிட்டு எரித்தால் இலவச உணவு...!
Image credit: Shemaroo / YouTube
  • News18
  • Last Updated: February 14, 2019, 6:47 PM IST
  • Share this:
காதலர் தினத்தன்று பெங்களூருவைச் சேர்ந்த ரெஸ்டாரண்ட் வித்தியாசமான ஆஃபரை அறிவித்துள்ளது.

பரத் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கண்டேன் காதலை’ படத்தில் முன்னாள் காதலியின் புகைப்படத்தை தீயிட்டு எரித்து அந்த நினைவுகள், வருத்தங்களை ஹீரோ போக்கிக்கொள்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

Read Also: அதீத காதலால் எப்போதும் டிரெண்டாகும் காதல் ஜோடிகள்


இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ரெஸ்டாரண்ட் இதே போன்ற ஆஃபர் ஒன்றை இந்த காதலர் தினத்துக்கு அறிவித்துள்ளது.

கோரமங்களா பகுதியில் உள்ள ‘ரவுண்ட் அப் கஃபே’ என்ற ரெஸ்டாரண்ட், “உங்கள் முன்னாள் காதலி/காதலன் புகைப்படத்தை காதலர் தினத்தன்று தீயிட்டு எரித்து இலவச உணவை பெற்றுக்கொள்ளுங்கள்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு செய்துள்ளது.அது மட்டும் இல்லாமல், காதலர் தினத்தன்று ரெஸ்டாரண்ட்டுக்கு வரும் ஜோடிக்கு இலவசமாக ஃபோட்டோ ஷூட் எடுத்து தரப்படும் என்றும் அறிவித்துள்ளது.
காதலர் தினத்தில் காதல் ஜோடிகளை கவர வித்தியாசமான யுக்திகளை ரெஸ்டாரண்ட்கள் எடுத்துவரும் நிலையில், ‘ரவுண்ட் அப் கஃபே’-வின் இந்த அறிவிப்பு வைரலாக பரவி வருகின்றது.

அமெரிக்காவிலும் இதேபோல ஒரு உணவு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், “முன்னாள் காதலி/ காதலன் புகைப்படத்தை எரித்து இலவசமாக 10 சிக்கன் துண்டுகளை பெறுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.Also See...

First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்