’முத்த பாபா’ கொடுத்தது முத்தம் மட்டுமல்ல கொரோனாவும் தான்...!

மத்தியபிரதேசத்தில் முத்த பாபா என்ற சாமியாரிடம் இருந்து பலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது

’முத்த பாபா’ கொடுத்தது முத்தம் மட்டுமல்ல கொரோனாவும் தான்...!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: June 11, 2020, 11:03 PM IST
  • Share this:
நாட்டில் கொரோனா அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்களில் மத்தியப்பிரதேசமும் டாப் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், அங்கு கொரோனா பாதித்து உயிரிழந்த சாமியார் ஒருவர், பல பேருக்கு முத்தம் கொடுத்திருந்ததால் கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ரத்லாம் மாவட்டத்தில் பிரபலமானவர் ‘முத்த பாபா’. பக்தர்களுக்கு கையில் முத்தம் கொடுத்து அருள் வழங்கி, சித்து வேலைகள் காட்டும் இவருக்கு, உள்ளூரில் பக்தர்கள் அதிகம்.

இந்த நிலையில், கடந்த நான்காம் தேதி இந்த பாபா, கொரோனா பாதித்து இறந்துள்ளார். மேலும், அம்மாவட்டத்தில், 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில், 19 பேர் முத்த பாபாவை சந்தித்ததாக கூறியுள்ளனர்.


மேலும், அவர் தங்களது கையில் முத்தமிட்டதையும் கூறியுள்ளனர். இவர்களில் 13 பேர் நாயபுரா என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். வட்டார மருத்துவ அலுவலர் பிரமோத் பிரஜபதி கூறுகையில், மொத்தம் 24 பேருக்கு முத்த பாபா தொடர்பில் இருந்து கொரோனா தொற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்First published: June 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading