11 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை சொந்த செலவில் சரிசெய்து வரும் தம்பதி: குவியும் பாராட்டுக்கள்!

11 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை சரிசெய்து வரும் தம்பதி: குவியும் பாராட்டுக்கள்!

73 வயதான கங்காதர் திலக் கட்னம் மற்றும் அவரது மனைவி வெங்கடேஸ்வரி கட்னம் (64) ஆகியோர் தங்கள் சொந்த காரை எடுத்துக்கொண்டு சமூக சேவையை செய்ய கிளம்புவார்கள்.

  • Share this:
இந்தியாவில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளால் இதுவரை ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. என்னதான் கவனமாக சாலையில் வாகனத்தை ஓட்டினாலும், எதிர்பாராத விதமாக சில விபரீதங்கள் நடப்பது வேதனையை அளிக்கிறது. இந்த சிக்கலை சமாளிக்கும் நோக்கத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த வயதான தம்பதியினர் தங்களால் முடிந்தவரை தங்கள் நகரத்தில் உள்ள சாலைகளை சரிசெய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 11 ஆண்டுகளாக குழிகளை சரிசெய்யவும், சாலைகளை சமன் செய்யவும் இந்த தம்பதியினர் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து வருகின்றனர். இவர்களின் தன்னலமற்ற சேவை கடவுளுக்கு இணையானது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இந்த தம்பதியினர் தங்கள் நகரத்தில் உள்ள பல்வேறு பிஸியான சாலைகள் மற்றும் சந்திப்புகளுக்குச் சென்று சீரமைத்து வருகின்றனர். மேலும் தங்கள் சொந்த பணத்தைப் பயன்படுத்தி நகர சாலைகளில் உள்ள இடைவெளிகளையும் துளைகளையும் சரிசெய்து விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றனர்.

73 வயதான கங்காதர் திலக் கட்னம் மற்றும் அவரது மனைவி வெங்கடேஸ்வரி கட்னம் (64) ஆகியோர் தங்கள் சொந்த காரை எடுத்துக்கொண்டு சமூக சேவையை செய்ய கிளம்புவார்கள். அவர்கள் அந்த வாகனத்தை ‘பொத்தல் ஆம்புலன்ஸ்’ என்று அழைத்து வருகின்றனர். அவர்கள் எந்த சாலைகளில் இருக்கும் குழிகளையும் நிரப்புவார்கள் என்று ஏஎன்ஐ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கங்காதர் கூறியதாவது, “சாலைகளில் உள்ள போத்தல்களை நானே சரிசெய்ய முடிவு செய்தேன். இதற்காக எனது ஓய்வூதிய பணத்தைப் பயன்படுத்துகிறேன். நான் இப்போது வரை 2,000 குழிகளை சரிசெய்துள்ளேன். இதற்காக சுமார் 40 லட்சம் செலவழித்துள்ளதாக" அவர் கூறியுள்ளார்.

https://twitter.com/ANI/status/1413996225762791425

'சாலை மருத்துவர்' என்று அன்பாக அழைக்கப்படும் கங்காதர், குழிகள் காரணமாக எண்ணற்ற விபத்துக்கள் நடந்ததைக் கண்டதும் இந்த பாதைகளை சரிசெய்ய முடிவு செய்ததாக கூறினார். மேலும் சாலைகள் குறித்து காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்த போதிலும், யாரும் அதிக கவனம் செலுத்தவில்லை. அதன் பிறகு தானே அந்த சாலைகளை சரிசெய்ய முடிவெடுத்தார். இந்திய ரயில்வேயின் முன்னாள் ஊழியர், 35 வருட சேவைக்குப் பிறகு தனது மனைவியுடன் ஹைதராபாத்தில் குடியேறினார்.

பிறகு அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக சேர்ந்தார். ஆனால் நகர சாலைகளின் மோசமான நிலை மற்றும் விபத்து அவரை அந்த வேலையை விட்டுவிட்டு சேவையை செய்ய வேண்டும் என்று தூண்டியது. அவர் தினமும் சாலையை சீரமைப்பதற்கான அனைத்து விஷயங்களுடனும் வெளியே செல்வார். சாலையில் உள்ள குழிகளை சரிசெய்வதற்கான தேவையான பொருட்களை வாங்க நிதி திரட்டும் யோசனையும் இவருக்கு இருந்தது.

இதற்காக மக்கள் தானாக முன்வந்து நன்கொடைகளை வழங்கும் ‘ஸ்ரமதன்’ என்ற ஒரு பொதுசேவை அமைப்பையும் அவர் தொடங்கினார். இதுகுறித்து பேசிய அவர், "எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவ ஆரம்பித்தால் பல சிக்கல்களை மிக எளிதாக தீர்க்க முடியும் என்பதை நம்புகிறேன். சாலை வழியாக, நாங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறோம், " என்று கூறினார். இதேபோன்ற ஒரு சம்பவத்தில், மைசூரு பகுதியை சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி சமீபத்தில் தனது சொந்த பணத்தை செலவு செய்து சாலைகளில் இருந்த குழிகளை சரிசெய்தார்.

Also read: தெலங்கானாவில் பழங்குடி மக்களின் உடை அணிந்து தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய தமிழிசை சௌந்தர்ராஜன்

எச்.டி. கோட் தாலுகாவில் உள்ள மடபுரா மற்றும் கே பெலட்டூருக்கு இடையில் சிக்காதேவம்மா கோயிலை இணைக்கும் ஐந்து கி.மீ சாலையில் உள்ள குழிகள் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்தன. அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால், தங்களுக்கு உதவுமாறு போலீஸ் உதவி துணை ஆய்வாளரிடம் உள்ளூர்வாசிகள் கோரிக்கை வைத்தனர்.

மக்கள் தோழன் என்று அழைக்கப்படும் எச்.டி. கோட் காவல் நிலையத்தைச் சேர்ந்த துரைசாமி, சாலைகளை சீர் செய்ய தனது ரூ.3 லட்சம் பணத்தை ரக்ஷனா சேவா அறக்கட்டளையின் நடத்தி வரும் மனைவியுடன் இணைந்து வழங்கினார். தொழிலாளர்கள் சாலையை சரிசெய்யும்போது அவர்களுக்கு உதவிகரமாக இருக்க தானும் களத்தில் இறங்கி வேலை செய்தார்.
Published by:Esakki Raja
First published: