Home /News /national /

இவர கொஞ்சம் கண்டுபிடிச்சி கொடுங்கப்பா... ஆனந்த் மஹிந்திராவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நபர்!

இவர கொஞ்சம் கண்டுபிடிச்சி கொடுங்கப்பா... ஆனந்த் மஹிந்திராவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நபர்!

ஆனந்த் மஹிந்திராவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நபர்

ஆனந்த் மஹிந்திராவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நபர்

Anand Mahindra : சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வரும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவை நபர் ஒருவரின் அசத்தல் கண்டுபிடிப்பு ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் புதுமையான திறமைகளை மனம் திறந்து பாராட்டுவதிலும், அதனை உலகிற்கு அடையாளம் காட்டுவதிலும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா செயல்படு வியக்க வைக்கூடியது. புதுப்புது கண்டுபிடிப்புகள் மற்றும் வித்தியாசமான நிகழ்வுகள் குறித்த வீடியோக்களை பார்த்துவிட்டார் என்றால் போது, உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து பாராட்டி தீர்த்துவிடுவார். புதுமையான கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் மற்றும் உதவிகளையும் ஆனந்த் மஹிந்திரா செய்து வருகிறார்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் நபர் ஒருவர் தாந்து சாதா சைக்கிளை சில நிமிடங்களில் மின்சார சைக்கிளாக மாறும் அசத்தல் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் துருவ் வித்யூத் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் குர்சவுரப் சிங் உருவாக்கிய அற்புதமான சைக்கிள் பற்றிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. துருவ் வித்யுத் எலக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் (DVECK) என்ற புரட்சிகரமான கருவியை வைத்து சாதா சைக்கிளை மின்சார சைக்கிளாக மாற்றிக்காட்டியுள்ள குர்சௌரப் சிங் என்பவரை ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.

  

மேலும் அந்த வீடியோவில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 கிலோமீட்டர் வரை இந்த சைக்கிளில் பயணம் மேற்கொள்ள முடியும். சைக்கிள் 170 கிலோ எடையை தாங்கும் அளவுக்கு வலிமையானது. நெருப்பு மற்றும் தண்ணீரால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது போன்ற பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

 

  

குர்சௌரப் சிங்கின் அற்புதமான கண்டுபிடிபு வீடியோவை பாராட்டியுள்ள ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், இது கடந்த சில நாட்களாக இணையத்தில் வட்டமிட்டு வருகிறது. மோட்டர் மூலம் சைக்கிளை இயக்கும் முதல் கருவி இது இல்லை என்றாலும், ஒரு சிறந்த வடிவமைப்பு-கச்சிதமான & திறமையான கண்டுபிடிப்பு.சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடுகிறது. செல்போன் போல 20 நிமிடம் சார்ஜ் செய்தாலே 50 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏறும் என அதன் சிறப்பம்சங்களை குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் :  காரை திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... நண்பனால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

தொடர்ந்து, நான் மிகவும் பாராட்டுவது என்னவெனில், கடினமான உழைக்கும் மக்களுக்கான அவரது பச்சாதாபமும் பேரார்வமும், பணிவான சுழற்சியே இன்னும் முதன்மையான போக்குவரத்து முறையாகும். மின்சார வாகனங்களில் கவனம் செலுத்தும் அனைத்து வாகன உற்பத்தியாளர்களுக்கும் இந்த எலெக்ட்ரிக் வாகன புரட்சி மிக முக்கியமானதாக இருக்கலாம் என்பதற்கு ஒரு நல்ல நினைவூட்டலாகும்.

இது வணிக ரீதியாக வெற்றி பெறுவது அல்லது கணிசமாக லாபம் ஈட்டுவது தவிர்க்க முடியாதது. நான் இன்னும் ஒரு முதலீட்டாளராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். யாராவது என்னை குர்சௌரப்பை தொடர்பு கொள்ள உதவினால் நன்றி என பதிவிட்டுள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்விட்டர் பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து எளிய மனிதர்களுக்கான எலெக்ட்ரிக் சைக்கிளை கண்டறிந்த குர்சௌரப் சிங்கிற்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Anand Mahindra, Electric bike

அடுத்த செய்தி