• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சிறைக்கு கூகுளில் 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்த கைதி- மும்பையில் சுவாரஸ்ய சம்பவம்!

சிறைக்கு கூகுளில் 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்த கைதி- மும்பையில் சுவாரஸ்ய சம்பவம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மும்பையை சேர்ந்த கைதி ஒருவர், தான் சென்றுவந்த சிறைக்கு கூகுளில் 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து, அதற்கு விளக்கமும் கொடுத்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    மும்பையைச் சேர்ந்த மன்சூரி ஆவேஷ் என்பவர், தான் செய்த குற்றத்துக்காக 5 மாதங்களுக்கு முன்பு  மீரா பயாந்தர் (Mira-Bhayandar) பகுதியில் உள்ள நாயா நகர் காவல்நிலையத்திற்கு கைதியாக சென்றுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், கூகுளில் நாயா நகர் காவல்நிலையத்துக்கு ரிவியூ கொடுத்துள்ளார்.

    அதில், "நாயா நகர் காவல் நிலையம் மற்றும் சிறைகள் மிகவும் தூய்மையாக இருந்தது.  அங்கு பணியாற்றும் அதிகாரிகளும் மிகவும் கனிவாக நடந்து கொண்டனர். கை விலங்கு மட்டும் இறுக்கமாக இருந்தது. இருப்பினும், காவலர்கள் அவர்களுடைய கடமையை சரியாக செய்தனர். வாய்ப்பிருந்தால் அந்த காவல்நிலையத்துக்கு மீண்டும் செல்ல ஆசை" என கூறி கூகுள் ரேட்டிங்கில் 5 ஸ்டார்களையும் ஆவேஷ் வழங்கியிருந்தார். இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி சந்தோஷ் சிங், காவல்நிலையத்தை எப்படி மதிப்பிடுவீர்கள் என கேப்சனிட்டு மகிழ்ச்சியுடன் எமோஜிக்களை பகிர்ந்தார்.

    அவரின் இந்த டிவீட் உடனடியாக 2000 க்கும் மேற்பட்ட லைக்ஸ்களை வாங்கிக் குவித்தது. ஆயிரக்கணக்கானோர் கைதியின் ரிவியூ-வுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு நெட்டிசன் தானும் கூகுள் ரிவியூவில் பாசிட்டிவ் கமெண்ட் எழுத உள்ளதாக கூறினார். மற்றொருவர், கைதியின் கோரிக்கைபடி கைவிலங்கு இறுக்கமாக இருப்பதை நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கிரிமினல்களை நண்பர்களாக நடந்துங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சித்ராவின் கணவர் ஹேம்நாத் போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்கு சென்றார்...

    மற்றொரு நெட்டிசன், ரிவியூவரின் கோரிக்கைப்படி, அவர் அந்த காவல்நிலையத்தின் சிறைக்கு செல்ல மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இன்னும் சிலர், காவல்நிலையத்தில் wiFi இருக்கிறதா சார் என்றும் வினவியுள்ளனர். மேலும், கைதிகளின் நண்பர்களாக காவல்நிலையம் இருக்க வேண்டும், அங்கு பீட்சா, பர்கர் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    Uber மற்றும் zomato நிறுவனங்கள் போன்று காவல்நிலையங்களும் ரேட்டிங் கேட்க ஆரம்பித்துவிட்டார்களா? என ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார். கூகுளில் காவல்நிலையத்திற்கு ரேட்டிங் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தான், ஆனால் நான் அங்கு செல்ல விரும்பவில்லை என ஒரு நெட்டிசன் கமெண்ட் அடித்துள்ளார். இது ஒருபுறமிருக்க, இன்னும் சிலர் வழக்கம்போல் காவல்நிலையத்தை வசைபாடி கமெண்ட் எழுதியிருந்தார்கள். 



    “குறிப்பிட்ட காவல்நிலையத்தில் சைபர் கிரைம் தொடர்பாக புகார் அளித்து 6 மாதங்கள் ஆகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் சந்தேகிக்கும் நபர் இன்னும் ஆக்டிவாக சமூகவலைதளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், காவலர்கள் கூகுளில் கைதி ஒருவர் ரேட்டிங் கொடுத்ததை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள் என ஒரு நெட்டிசன் காட்டமாக சாடியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: