Home /News /national /

‘காணாமல் போனவர்’ விளம்பரத்தின் மூலம் ஷெர்வானியை பிரபலமாக்கிய சுல்தான் கடை!

‘காணாமல் போனவர்’ விளம்பரத்தின் மூலம் ஷெர்வானியை பிரபலமாக்கிய சுல்தான் கடை!

ஷெர்வானியை பிரபலமாக்கிய சுல்தான் கடை

ஷெர்வானியை பிரபலமாக்கிய சுல்தான் கடை

தினமும் நியூஸ் பேப்பர்களில் பல்வேறு விதமான விளம்பரங்களை பார்த்திருப்போம். அவற்றில் கண்ணீர் அஞ்சலி, காணாமல் போனவர்கள், மணமகன்/மணமகள் தேவை போன்ற விளம்பரங்களை அவ்வளவு சீக்கிரம் கடந்து வர மாட்டோம்.

எந்தவொரு பொருள் விற்கப்பட வேண்டுமென்றாலும் அதற்கான சிறந்த விளம்பரம் தந்தாக வேண்டி இருக்கும். விளம்பரங்கள் என்றால் வெறும் எழுத்தும், புகைப்படமும் இருந்தால் மட்டும் போதாது. சிறந்த கலை நுட்பம், படைப்பாற்றல், கற்பனை திறன் ஆகியவையும் ஒரு விளம்பரத்திற்கு மிக அவசியமானது. அப்படிப்பட்ட பல விளம்பரங்களை சமீப காலமாக டிவியிலும், சமூக ஊடகங்களிலும், நியூஸ் பேப்பரிலும் பார்த்து வருகிறோம்.

அவற்றில் சில நம் நினைவில் ஆழமாக பதிந்து விடுகிறது. 'பவித்ரா சோப்பு வாங்கிட்டு வா மா' என்கிற சோப்பு விளம்பரம் முதல் 'சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி' என்கிற பூஸ்ட் விளம்பரங்கள் வரை நம் மனதில் சிறு வயதில் இருந்தே குறிப்பிட்ட சில விளம்பரங்கள் ஆழமாக பதிந்து விடுகிறது. மேலும் இவை வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதால் அதிக அளவில் லாபமும் பெற்று விடுகிறது. இப்படிப்பட்ட கற்பனை திறன் அதிகம் கொண்ட விளம்பரம் ஒன்று தான் தற்போது சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

தினமும் நியூஸ் பேப்பர்களில் பல்வேறு விதமான விளம்பரங்களை பார்த்திருப்போம். அவற்றில் கண்ணீர் அஞ்சலி, காணாமல் போனவர்கள், மணமகன்/மணமகள் தேவை போன்ற விளம்பரங்களை அவ்வளவு சீக்கிரம் கடந்து வர மாட்டோம். இந்த யுக்தியை பயன்படுத்தி தான் சிறப்பான விளம்பரம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். காணாமல் போனவர் என்கிற பெயரில் ஒரு விளம்பரத்தை தயார் செய்துள்ளனர். அதில் ஷர்வானி அணிந்து கொண்டுள்ள, மஞ்சு என்பவரின் அழகிய புகைப்படத்தை இணைத்து அவர் காணாமல் போயுள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

ALSO READ |  தனக்கான ஜோடியை தேடும், உலகிலேயே மிக உயரமான மனிதர்...

மேலும் அவரின் புகைப்படத்திற்கு கீழே 'உயரமான, அழகான ஆண் மகன். 24 வயது. என் இனிய மகன் மஞ்சு காணாமல் போய் விட்டார். தயவுசெய்து வீட்டிற்கு மீண்டும் வந்துவிடவும். இங்கு எல்லோரும் சோகத்தில் உள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அதற்கு கீழே "நீ கேட்டு கொண்டபடி உனது இரண்டு நிபந்தனைகளையும் நாங்கள் பூர்த்தி செய்து விடுகிறோம். நீ விரும்பிய 'லைலா' என்கிற பெண்ணை உனக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறோம். முக்கியமாக உனது திருமண ஷர்வானியை 'சுல்தான்-தி கிங் ஆப் ஷர்வானி' என்கிற கடையில் இருந்து வாங்கி வந்து விடுகிறோம்." என்று தரப்பட்டுள்ளது.



அடுத்தாக இந்த கடையின் புதிய கிளை மற்றும் பார்க்கிங் வசதியை விளக்கும் வகையில், "நமது குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் குர்தா மற்றும் ஷர்வானியை இங்கே வாங்கி கொள்ளலாம். இதன் புதிய கிளை மார்க்கெட் அருகில் திறந்திருப்பதால் அங்கே சென்று வாங்கி விடலாம். மேலும் அங்கு கார் பார்க்கிங் வசதியும் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக சுல்தான் ஷர்வானி கடையின் முகவரியையும், தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் அதில் இணைத்துள்ளனர்.

ALSO READ |  பல மாதங்களுக்கு பின் பராமரிப்பாளருடன் இணைந்த யானைகள்.! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

இப்படியொரு கிரியேட்டிவிட்டி நிறைந்த விளம்பரத்தை பலர் பார்த்து ரசித்து வருகின்றனர். இதே போன்ற விளம்பரத்தை சில ஆண்டுகளுக்கு முன்னரே இதே சுல்தான் ஷர்வானி கடையின் மூலம் விளம்பரம் தரப்பட்டது. அப்போதும் இந்த விளம்பரம் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Internet, Sherwani

அடுத்த செய்தி