முகப்பு /செய்தி /இந்தியா / “இது ஏழைகளுக்கான பட்ஜெட்.. மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்” பாஜக எம்பிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

“இது ஏழைகளுக்கான பட்ஜெட்.. மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்” பாஜக எம்பிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்று இதனை கூறிவிட முடியாது - பிரதமர் மோடி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். தனது தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஏழைகளின் நலனே மையமாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடந்த இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட முழுமையான பட்ஜெட் இது என்று குறிப்பிட்டார்.

எனினும் தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்று இதனை கூறிவிட முடியாது என்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருடைய நலன்கள், ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவை பட்ஜெட்டின் ஒவ்வொரு அங்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

ஜி20 கூட்டங்களில் பங்கேற்க வரும் பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகள், இந்தியாவின் ஏற்பாடுகளை பாராட்டுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் பூகம்பத்தை நினைவுகூர்ந்த பிரதமர், துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

First published:

Tags: BJP MP, PM Modi, Union Budget 2023