• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புற்றுநோய் பாதித்த சிறுவர்களுக்காக நிதி திரட்டும் 11 வயது கேன்சர் சிறுமி - சுவாரஸ்ய சம்பவம்!

புற்றுநோய் பாதித்த சிறுவர்களுக்காக நிதி திரட்டும் 11 வயது கேன்சர் சிறுமி - சுவாரஸ்ய சம்பவம்!

 நிதி திரட்டும் 11 வயது கேன்சர் சிறுமி

நிதி திரட்டும் 11 வயது கேன்சர் சிறுமி

ஆண்டுதோறும் சுமார் 75,000 குழந்தைகள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பருவ புற்றுநோய்களுக்கு சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

  • Share this:
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி, புற்றுநோய் பாதித்த இளம் வயதினருக்காக ஆன்லைனில் சோப்பு, சாக்லெட் ஆகியவற்றை விற்பனை செய்து நிதி திரட்டுகிறார்.

    மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுமி நியா, லிம்போபிளாஸ்டிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னைப்போலவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்ற சிறுவர்களுக்காக நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ள அவர், ஆன்லைன் மூலம் சாக்லெட், சோப்பு ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார்.

    10 லட்சம் ரூபாய் நிதி திரட்டுவதை இலக்காக கொண்டு, அதற்காக உழைத்து வருகிறார். இது குறித்து அவருடைய தாயார் ஜியா நாரிமன் பேசும்போது, "நியா மிகவும் சுறுசுறுப்பான குழந்தை எனத் தெரிவித்தார். விலங்குகள் மீது மிகுந்த ஆர்வம் உடைய நியா, கொரோனா காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வமாக இருந்தாள்.

    தெரு நாய்களுக்கு உணவுகளை வழங்கினார். அந்த நேரத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என அவள் யோசிக்கத் தொடங்கியபோது சோப்பு தயாரிக்கத் தொடங்கினால். அந்த சோப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து கிடைக்கும் நிதியை, மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தினாள். கடந்த ஜூன் மாதம் நியாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. லிம்போபிளாஸ்டிக் புற்றுநோய் என மருத்துவர்கள் கூறினார்கள். உடனடியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறாள். எனக்கு, என்னுடைய தாய் தான் முழு ஆதரவாக இருந்து வருகிறார்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Surf_and_Nia (@soap_for_strays)






     

    இதற்கு முன்னர் சோப்பு விற்பனை மூலம் கிடைத்த நிதியை தெரு நாய்களுக்கு உதவி செய்யும் மும்பையைச் சேர்ந்த என்.ஜி.ஓ ஒன்றுக்கு கொடுத்தார். தற்போது கிடைக்கும் நிதியை Give India என்ற நிறுவனத்துக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் சிறு வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு உதவும் நோக்கில், இந்த சேவையை மேற்கொண்டிருக்கிறாள்" என தெரிவித்தார்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Surf_and_Nia (@soap_for_strays)






    தொடர்ந்து பேசிய அவர், நியா பள்ளிப்படிப்பையும் முடிந்தளவுக்கு தொடர்ந்து கொண்டிருப்பதாக கூறினார். அவள் தயாரிக்கும் சோப்புகள் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த சோப்புகள் பல்வேறு வெரைட்டிகளில் உள்ளதாகவும், உதாரணமாக எலுமிச்சை, ரோஜா, கற்றாழை உள்ளிட்ட பிளேவர்களில் கிடைக்கும் என நியாவின் தாய் தெரிவித்தார். சிறுமியின் இந்த செயலை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Surf_and_Nia (@soap_for_strays)






     

    உலக சுகாதார மையத்தின் அறிக்கையின்படி, உலகளவில் குழந்தை பருவ புற்றுநோய் அதிகம் இந்தியாவில் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 75,000 குழந்தைகள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பருவ புற்றுநோய்களுக்கு சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

    ஆண்டுதோறும் பிப்ரவரி 15 ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய அரசு சார்பிலும் கவனத்தில் கொள்ளப்பட்டு, விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: