ஹோம் /நியூஸ் /இந்தியா /

“திருவள்ளுவர் கருத்துகள் பன்முகத்தன்மை கொண்டவை..” இளைஞர்களுக்கு பிரதமர் சொன்ன அட்வைஸ்...!

“திருவள்ளுவர் கருத்துகள் பன்முகத்தன்மை கொண்டவை..” இளைஞர்களுக்கு பிரதமர் சொன்ன அட்வைஸ்...!

திருவள்ளுவர் - பிரதமர் மோடி

திருவள்ளுவர் - பிரதமர் மோடி

Thiruvalluvar Day | திருவள்ளுவர் தினத்தில் அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

1333 திருக்குறள்களின் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் தை 2ஆம் தேதி திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன், திருவள்ளுர், பெரியார், அம்பேத்கர் விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்.

First published:

Tags: PM Modi, Thiruvalluvar Day