ஹோம் /நியூஸ் /இந்தியா /

40 நிமிடங்களில் ரூ.8.25 கோடி வருமானம் ஈட்டிய திருப்பதி தேவஸ்தானம்

40 நிமிடங்களில் ரூ.8.25 கோடி வருமானம் ஈட்டிய திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி

திருப்பதி

புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

300 ரூபாய் தரிசன டிக்கெட் மூலம் 40 நிமிடங்களில் 8 கோடியே 25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.

மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று வைத்திருக்க வேண்டும் அல்லது தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே திருப்பதியில் நேற்று 62, 055 பேர் தரிசனம் செய்தனர்.23, 044 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.99 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

இதையும் படிங்க:தமிழகத்தில் XBB வகை கொரோனாதான் உறுதியாகி வருகிறது : மா.சுப்பிரமணியம் விளக்கம்!

புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதை முன்னிட்டு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் இன்று காலை ஆன்லைனில் வெளியிட்டது. இந்நிலையில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 40 நிமிடங்களில் 75 ஆயிரம் டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதன்மூலம் தேவஸ்தான நிர்வாகத்திற்கு 8 கோடியே 25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati temple