Home /News /national /

திருப்பதியில் இலவச தரிசன கவுண்டர் மூடப்பட்டது... பக்தர்கள் போராட்டம்

திருப்பதியில் இலவச தரிசன கவுண்டர் மூடப்பட்டது... பக்தர்கள் போராட்டம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாமல் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று பக்தர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    திருப்பதியில் இலவச தரிசன கவுண்டர் மூடப்பட்டது மற்றும் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது ஆகியவை காரணமாக திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதி உள்ள கவுண்டர்களில் இம் மாதம் 12ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்று பக்தர்களுக்கு வழங்கி முடிக்கப்பட்டன.

    இந்த நிலையில் திருப்பதியில் செயல்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்களும் நேற்று மூடப்பட்டன. கவுண்டர்கள் மூடப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் வழக்கம் போல் இன்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வாங்குவதற்காக திருப்பதிக்கு வந்தனர்.

    கவுண்டர்கள் மூடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.

    இதையும் படிங்க - Sabarimala Temple Opening Dates | சபரிமலை நடை இன்று மாலை திறப்பு... நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

    இந்த நிலையில் திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையான் கோவில் முன் நின்று மானசீகமாக இறை வழிபாடு நடத்தி ஊர் திரும்பலாம் என்று அவர்களில் பலர் முடிவு செய்தனர்.

    எனவே அவர்கள் திருப்பதி மலைக்கு செல்ல புறப்பட்டனர். ஆனால் மலையடிவாரத்தில்  இருக்கும் தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் டிக்கெட் இல்லாதவர்களை திருப்பதி மலைக்கு அனுப்பிவைக்க மறுப்பு தெரிவித்தனர்.

    இதையும் படிங்க - ''என்ன மொழி பேச வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்'' - இந்தி விவகாரத்தில் அமித் ஷாவுக்கு கே.டி.ஆர். கண்டனம்

    மேலும் நாளை பதினோராம் தேதி ஏழுமலையானை தரிசிக்க தேவையான டிக்கெட்டுகளுடன் வரும் பக்தர்கள் மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல வேண்டும். 12ஆம் தேதி சாமி கும்பிடுவதற்கு தேவையான டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பக்தர்கள் நாளை காலை முதல் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மலையடிவாரத்தில் சாலையில் நின்றவாறு அங்கிருந்து செல்ல இயலாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாமல்  திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்க இயலாது என்று அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பக்தர்களிடம் கண்டிப்பாக கூறிவிட்டனர்.

    இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்குவதற்காக  இன்று திருப்பதிக்கு வந்த பக்தர்கள் மற்றும் 12ஆம் தேதி ஏழுமலையானை வழிபடும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்கிய பக்தர்கள் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஊர் திரும்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Tirumala Tirupati

    அடுத்த செய்தி