தவறை தட்டிக்கேட்ட மனைவியை டம்பிள்சால் தாக்கிய கணவர் - பகீர் சம்பவத்தின் வீடியோ

Youtube Video

கணவரின் தவறை தட்டிக்கேட்ட மனைவியின் தலையில் டம்புள்ஸ் கருவியால் கணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 • Share this:
  ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொவ்வூரை சேர்ந்த தம்பதி சீனு - மாதவி. இந்த தம்பதிக்கு வயது வந்த இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

  சீனு ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றுகிறார். மது, பெண்களுடன் உல்லாசம் என அனைத்து பழக்கங்களுக்கும் அடிமையான சீனுவை மனைவி மாதவி தட்டி கேட்டுள்ளார்.

  இதனால் மனைவி மாதவி மீது கடும் கோபம் கொண்ட சீனு அவரை சில நாட்களுக்கு முன் கொலை செய்ய முயன்றார். சீனுவின் பழக்கவழக்கங்கள் தொடர்பாக வியாழக்கிமை மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற சீனு உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் டம்புள்சை எடுத்து மாதவி தலைமீது கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றார். படுகாயமடைந்த மாதவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

  கொலை முயற்சி குறித்து மாதவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் சீனு அரசுப் பேருந்து ஓட்டுநராக இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.  போலீசாரிடம் விளக்கம் கேட்டபோது சீனு தலைமறைவாகிவிட்டதாகவும், தேடி வருவதாகவும் கூறி வருகின்றனர்.
  Published by:Sheik Hanifah
  First published: