ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதி கோவிலுக்கு இவ்வளவு சொத்துக்களா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது தேவஸ்தானம்..

திருப்பதி கோவிலுக்கு இவ்வளவு சொத்துக்களா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது தேவஸ்தானம்..

திருப்பதி கோவில்

திருப்பதி கோவில்

சமூக வலைதளங்களில் நடமாடும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதி இருப்பு, தங்க இருப்பு ஆகியவை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தின் ஒரு பகுதியை மத்திய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.

    இது போன்ற பதிவுகள் மிகவும் தவறானவை என்றும், அடிப்படை ஆதாரம் அற்றவை என்றும் தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    ஆனாலும் தொடர்ந்து இது போன்ற பதிவுகள் வெளியாகி வந்தன.

    இந்த நிலையில் தேவஸ்தானத்தின் பண கையிருப்பு மற்றும் தங்க இருப்பு ஆகியவை பற்றி வெள்ளை அறிக்கை  வெளியிட்டுள்ளது.

    இது குறித்து  கடந்த 30. 6. 2019 அன்று தேவஸ்தானம் பல்வேறு வங்கிகள் மற்றும் இதர அமைப்புகளில் 13 ஆயிரத்து 25 கோடியே ஒன்பது லட்சம் ரூபாயை நிரந்தர வைப்பு நிதியாக போட்டு வைத்திருந்தது என்றும், வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் 7339 கிலோ 740 கிராம் தங்கம் அன்றைய தேதியில் இருப்பு இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வங்கக் கடலில் 9ஆம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் பாதிப்பு தெரியுமா?

    தேவஸ்தான அறங்காவலர் குழு முதலீடுகள் விஷயத்தில் செலுத்திய சிறப்பு கவனம் காரணமாக தற்போது வங்கிகளில் 15 ஆயிரத்து 938 கோடியே எட்டு லட்ச ரூபாய் பணமும்,10 ஆயிரத்து 288 கிலோ 370 கிராம் தங்கமும் டிபாசிட்டாக இருப்பு உள்ளது என்று அதில் தெரிவிக்கபட்டு உள்ளது.

    Published by:Arunkumar A
    First published: