இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் - ஐ.சி.எம்.ஆர்

மாதிரிப் படம்

இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்று ஐ.சி.எம்.ஆர் மருத்துவர் சாமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து திணறிவருகின்றன. கொரோனா முதல்அலை முடிந்து தன்னிலை அடைவதற்குள் இரண்டாவது அலை தாக்கியது. அதற்குள் உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

  தற்போது, உலக நாடுகள் மெல்லமாக இயல்புநிலையை நோக்கிநகர்ந்துவருகின்றன. இந்தநிலையில், மூன்றாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. மூன்றாவது அலை குறித்து பேசிய டெட்ரோஸ் அதானம், ‘எதிர்பாராத விதமாக நாம் கொரோனா மூன்றாவது அலையின் தொடக்க நிலையில் இருக்கிறோம். உலகில், 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள 'டெல்டா' வைரஸ் பரவியுள்ளது. இது விரைவில் உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பரவும் கொரோனா திரிபாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

  ஐரோப்பிய நாடுகள் மற்றும் வடக்கு அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவது அதிகப்படுத்தப்பட்டதன் காரணமாக அங்கே கொரோனா பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால், உலக நாடுகளில் இருக்கும் நிலை எதிர்நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

  இந்தநிலையில், என்.டி.டி.வி ஆங்கிலத்துக்கு பேட்டியளித்த ஐ.சி.எம்.ஆரின் தொற்று நோய் மற்றும் பரவும் நோய்கள் துறையின் தலைவர் மருத்துவர் சாமிரன் பாண்டா, ‘ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும். நாடு தழுவிய அளவில் இந்த பாதிப்பு இருக்கும். ஆனால், இரண்டாவது அலையை விட அதிகமாகவோ, அதே அளவு தீவிரமாக இந்த அலையின் பாதிப்பு இருக்காது. கொரோனா மூன்றாவது அலைக்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முதல் மற்றும் இரண்டாவது அலையிலிருந்து கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியம் குறைந்தால், அது மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும். புதிய திரிபு உருவாகும் போது அது நோய் எதிர்ப்பு சக்தியைக் கடந்துவிடும். எதிர்ப்பு சக்தியைக் கடக்கும் தன்மை இல்லாவிட்டாலும், வேகமாக பரவும் தன்மை கொண்டதாக புதிய திரிபு இருக்கும். மாநிலங்கள் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பதன் காரணமாக அது வேகமாக கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: