முகப்பு /செய்தி /இந்தியா / தொடர்ந்து தீ விபத்துகள்... 400 CNG பேருந்துகளைச் சாலைகளிலிருந்து திரும்பப் பெற்ற மும்பை போக்குவரத்துக் கழகம்

தொடர்ந்து தீ விபத்துகள்... 400 CNG பேருந்துகளைச் சாலைகளிலிருந்து திரும்பப் பெற்ற மும்பை போக்குவரத்துக் கழகம்

தீப்பற்றி எரிந்த பேருந்து

தீப்பற்றி எரிந்த பேருந்து

ஒரு மாதத்தில் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்ட நிலையில் 400 CNG பேருந்துகளை மும்பை சாலைகளில் இருந்து உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

புதன்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் அந்தேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட TATA CNG பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதக் காலத்தில் தொடர்ந்து 3 ஆவது முறையாக TATA CNG பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பயணியர்களின் நலன் கருதி உடனடியாக மும்பை சாலையில் பயன்பாட்டில் உள்ள 400 TATA CNG பேருந்துகளைத் திரும்பிப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட மும்பை போக்குவரத்துக் கழகம் ( BEST),தற்போது ஏற்பட்டது போல் ஜனவரி 25 ஆம் நாள் மற்றும் பிப்ரவரி 11 ஆம் நாள் என்று இரண்டு முறை CNG பேருந்துகள் தீப்பற்றியுள்ளது.

தீ விபத்தினால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற கோளாறுகள் ஏற்படுவதால் அனைத்து TATA CNG பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஒரு வகையாகப் பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாதேஸ்வரி லிமிடெட் என்ற நிறுவனத்தால் இந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்தின் பராமரிப்பு மற்றும் இதர தேவைகளை ஒப்பந்த பெற்ற நிறுவனங்களே பொறுப்பேற்று செய்ய வேண்டும் என்ற நிலையில் மும்பை போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை நிருத்தி சரிபார்ப்பு அனுப்பியுள்ளனர்.

Also Read : 512 கிலோ வெங்காயம் விலை வெறும் ரூ.2 தான்... 70 கி.மீ பயணித்து வந்த விவசாயிக்கு நேர்ந்த சோகம்..!

மும்பை போக்குவரத்துக் கழகம் தினசரி சுமார் 35 லட்சம் பயணிகளைக் கொண்டு இயங்கிவருகிறது. 3,619 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. அதில் 2,927 பேருந்துகள் CNG மூலம் இயங்கும் வாகனங்கள் ஆகும்.

First published:

Tags: Bus, Bus accident, Mumbai