Home /News /national /

சந்திரயான் 2-வின் அடுத்த வெற்றி... தற்போதைய நிலை?

சந்திரயான் 2-வின் அடுத்த வெற்றி... தற்போதைய நிலை?

சந்திரயான் 2

சந்திரயான் 2

சந்திரயான் 2 சுற்றுவட்டப்பாதையை 4-வது முறையாக மாற்றியமைக்கும் பணி ஆகஸ்ட் 2-ம் தேதி மதியம் 2 முதல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
சந்திரயான் 2 சுற்றுவட்டப்பாதையை 3-வது முறையாக மாற்றியமைக்கும் பணி வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இந்தியா தயாரித்த சந்திராயன் 2 விண்கலம் கடந்த 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் - 2,  16 நிமிடங்களில் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

தற்போது சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை 3-வது முறையாக மாற்றியமைக்கும் பணி வெற்றியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த இஸ்ரோ, ‘சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை மாற்றியமைக்கும் பணி வெற்றியடைந்தது. மதியம் 3.12 மணிக்கு 989 நொடிகள் சந்திரயான் 2 இயக்கப்பட்டு புவி சுற்றுவட்டப்பாதை 71,792 கி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 251 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 2 தற்போது 276 கி.மீ -ல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி, புவி வட்டப்பாதையில் இருந்து விலகி சந்திரயான் 2 நிலவுக்கு புறப்படும். திட்டமிட்டபடி சந்திரயான் 2 பயணித்தால் ஆகஸ்ட் 20-இல் நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடையும் என்று’ அறிவித்துள்ளது.

சந்திரயான் 2 சுற்றுவட்டப்பாதையை 4-வது முறையாக மாற்றியமைக்கும் பணி ஆகஸ்ட் 2-ம் தேதி மதியம் 2 முதல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

 

Also watch

Published by:Prabhu Venkat
First published:

Tags: About chandrayaan 2, Chandrayaan, Chandrayaan 2, Chandrayaan 2 date, Chandrayaan 2 in tamil, Chandrayaan 2 isro, Chandrayaan 2 lander name, Chandrayaan 2 launch date, Chandrayaan 2 launch time, Chandrayaan 2 live launch, Chandrayaan 2 mission, Chandrayaan 2 news, Chandrayaan 2 photos, Chandrayaan 2 tamil news, Chandrayaan 2 video, India chandrayaan 2, ISRO, Isro chandrayaan 2, Isro chandrayaan 2 launch, Isro launch, Lander chandrayaan 2, Live chandrayaan 2, Name of chandrayaan 2, What is chandrayaan 2

அடுத்த செய்தி