ஹோம் /நியூஸ் /இந்தியா /

மூன்றாவது குழந்தையை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது: சொல்கிறார் பாபா ராம்தேவ்!

மூன்றாவது குழந்தையை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது: சொல்கிறார் பாபா ராம்தேவ்!

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு வாக்களிக்கும் உரிமையை அளிக்கக்கூடாது என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

ஹரித்துவாரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாபா ராம்தேவ், ‘‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தையைப் பெற்றுக்கொள்ளக் கூடாது.

மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை என சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 150 கோடியாக மாறுவதைத் தடுக்க முடியும். அது எந்த மதத்தினராக இருந்தாலும் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அரசு இந்த நடவடிக்கையை எடுப்பதன் மூலம், அரசு அளிக்கும் அனைத்து சலுகைகளும் அனைத்து வாக்காளர்களுக்கும் சென்று சேரும்.

பசுக்களைக் கொல்வதைத் தடுக்க தேசிய அளவில் தடை கொண்டு வர வேண்டும். அப்போது தான் பசு மாடு திருடர்கள் மற்றும் கவ் ராக்‌ஷக் இடையிலான மோதல் குறையும்.

மாமிசம் சாப்பிட வேண்டும் என்று கூறுபவர்களுக்கு வேறு வகையான மாமிசங்கள் உள்ளன. அவர்கள் அதை சாப்பிட்டுக்கொள்ளட்டும்.

இஸ்லாமிய நாடுகளில் மதுவுக்குத் தடை உள்ளது. அதே போன்று இந்தியாவில் ஏன் அதை தடை செய்யக்கூடாது? எனவே இந்தியாவில் மதுவையும் முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்றும் பாபா ராம் தேவ் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க:

First published:

Tags: Baba Ramdev