ஹோம் /நியூஸ் /இந்தியா /

பல்சர் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிய பலே திருடர்கள்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்!

பல்சர் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிய பலே திருடர்கள்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்!

பல்சர் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிய பலே திருடர்கள் கைது!

பல்சர் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிய பலே திருடர்கள் கைது!

கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டிற்கும், பைக் திருடும் பணத்தை மதுக்குடிக்கவும் ஆடம்பர செலவிற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

புதுச்சேரி வெவ்வேறு பகுதிகளில் பல்சர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இரண்டு கூலி தொழிலாளர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரியில் நகர மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் 20க்கும் மேற்பட்ட பல்சர் இருசக்கர வாகனங்கள் திருடு போனது. இதனால் அனைத்து காவல் நிலைய போலீசாரும் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு புதுச்சேரி 100 அடி சாலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சிறப்பு அதிரடி படை போலீசார் மற்றும் முதலியார்பேட்டை போலீசார் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் தாறுமாறாக அவ்வழியே வந்த இருவரை நிறுத்தி இருசக்கர வாகனத்திற்கான உரிய சான்றிதழ்களை கேட்ட போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் இருவரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (38), சிலம்பரசன் (37), இவர்கள் ஒட்டி வந்தது திருட்டு வாகனம் என கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நாட்டின் முதல் ஹெட்ரோலோகஸ் கோவிட் தடுப்பூசி - கோர்பேவாக்ஸ் பூஸ்டருக்கு அனுமதி

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு கூலி தொழில் செய்ய வரும் இவர்கள் நகர பகுதியான முதலியார்பேட்டை, உருளையான்பேட்டை, புறநகர பகுதியான நெட்டப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பல்சர் வாகனங்களை மட்டும் குறிவைத்து திருடி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் பக்கத்தில் உள்ள சங்கர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.5 லட்ச ரூபாய் மதிப்பிளான 4 பல்சர் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டிற்கும், பைக் திருடும் பணத்தை மதுக்குடிக்கவும் ஆடம்பர செலவிற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். இருவரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

மதுக்குடிக்கவும் ஆடம்பர செலவிற்கும் பைக் திருடிய விழுப்புரம் ஆசாமிகள் மது குடித்து விட்டு தாறுமாறாக வண்டி ஓட்டி வந்து போலீசாரிடம் சிக்கி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

Published by:Esakki Raja
First published:

Tags: Bike Theft, Pondicherry, Puducherry