கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடாமல் வெங்காயத்தை திருடிச் சென்றுள்ளனர்

கோப்புப் படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  மேற்கு வங்கத்தில் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடிக்காமல் வெங்காயத்தை திருடிச் சென்றுள்ளனர்.

  கனமழையால் நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் அதிகபட்சமாக 130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  Also see... எனை நோக்கி பாயும் தோட்டா, மார்கெட் ராஜா என கோலிவுட்டில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்!

  இந்நிலையில், கொல்கத்தா அருகே சுடஹட்டாவில் அக்சய் தாஸ் என்பவரின் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், பணத்தை கொள்ளையடிக்காமல் அங்கிருந்த வெங்காய மூட்டைகளை தூக்கிச் சென்றனர்.

  மேலும், இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர். பணத்தைவிட்டு விட்டு 50,000 ரூபாய்க்கு விலை போகும் வெங்காயத்தை அள்ளிச் சென்றதாக கடை உரிமையாளர் அக்சய் தாஸ் தெரிவித்துள்ளார்.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: