Home /News /national /

கொள்ளை போன 60 அடி நீள "இரும்புப் பாலம்".. வடிவேலு பாணியில் "பாலத்தைக் காணோம்யா" என புலம்பும் மக்கள்!

கொள்ளை போன 60 அடி நீள "இரும்புப் பாலம்".. வடிவேலு பாணியில் "பாலத்தைக் காணோம்யா" என புலம்பும் மக்கள்!

ஊரே திரண்டு வந்து வேடிக்கை பார்க்க அவர்கள் முன்னிலையில், இரும்பு சட்டங்களை வெட்டி எடுத்து வாகனத்தில் ஏற்றி இருக்கிறார்கள்.

ஊரே திரண்டு வந்து வேடிக்கை பார்க்க அவர்கள் முன்னிலையில், இரும்பு சட்டங்களை வெட்டி எடுத்து வாகனத்தில் ஏற்றி இருக்கிறார்கள்.

ஊரே திரண்டு வந்து வேடிக்கை பார்க்க அவர்கள் முன்னிலையில், இரும்பு சட்டங்களை வெட்டி எடுத்து வாகனத்தில் ஏற்றி இருக்கிறார்கள்.

    ரொக்கப் பணம், தங்கம், வெள்ளியை திருடும் கொள்ளையர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள்... பாலத்தையே திருடிய கொள்ளையர்களை கேள்விப்பட்டதுண்டா... பீகாரில் அப்படி ஒரு கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது.

    வடிவேலு "கிணத்தைக் காணோம்யா" என புலம்பியதைப் போல பிகார் மாநிலம் ரோதஸ் மாவட்டத்தில் உள்ள அமியவர் கிராம மக்கள் "பாலத்தைக் காணோம்யா" என புலம்பிக் கொண்டிருக்கின்றனர். வடிவேலு இல்லாத கிணத்தை காணவில்லை என கூறுவார். ஆனால், இந்த ஊரில் ஏற்கனவே இருந்த 60 அடி நீள இரும்புப் பாலத்தை காணவில்லை. அதாவது மக்கள் முன்னிலையில் 5 லட்சம் கிலோ இரும்புப் பாலத்தை கும்பல் திருடிச் சென்றுள்ளது.

    இங்குள்ள கால்வாயின் குறுக்கே 1972ம் ஆண்டு இரும்புப் பாலம் ஒன்று கட்டப்பட்டது. 12 அடி உயரமும், 60 அடி நீளமும் கொண்ட அந்த பாலம் 5 லட்சம் கிலோ இரும்பால் ஆனது. பழசானதால் பல பத்தாண்டுகளாக அது பயன்படுத்தப்படாமல் இருந்து வந்திருக்கிறது.

    இதையும் படிங்க - ராணுவத்தின் புதிய நியமன கொள்கை.. 50% சதவீத ராணுவ வீரர்கள் 5 ஆண்டுகளில் ஓய்வுபெறக் கூடும்

    இந்நிலையில், சில நாட்களுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் என கூறிக் கொண்டு சிலர் வந்திருக்கிறார்கள். கூடவே இரும்பு சட்டங்களை வெட்டி அகற்ற கேஸ் கட்டர், எடுத்துச் செல்ல வேன், மணலைத் தோண்டி இரும்புகளை எடுக்க ஜேசிபி இயந்திரம் என படை சூழ வந்த அவர்கள் பாலத்தை கூறு போடத் தொடங்கி இருக்கிறார்கள்.



    ஊரே திரண்டு வந்து வேடிக்கை பார்க்க அவர்கள் முன்னிலையில், இரும்பு சட்டங்களை வெட்டி எடுத்து வாகனத்தில் ஏற்றி இருக்கிறார்கள். உதவிக்கு அங்கிருந்த அரசு அதிகாரிகளையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். 3 நாட்களில் கொஞ்சம், கொஞ்சமாக முழு பாலத்தையும் உடைத்து காலி செய்து கொண்டு சென்றுவிட்டார்கள்.

    அதற்கு பின் வந்த உண்மையான அதிகாரிகள் பாலத்தை எங்கே என தேடி இருக்கிறார்கள். ஏற்கெனவே அதிகாரிகள் என சிலர் வந்து பாலத்தை வெட்டி எடுத்துச் சென்ற கதையை மக்கள் கூற உண்மையான அதிகாரிகள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். பட்டப்பகலில் 3 நாட்களாக இரும்புப் பாலம் கொஞ்சம், கொஞ்சமாய் கொள்ளையடிக்கப்பட்டது அப்போதுதான் தெரியவந்திருக்கிறது. உடனே அதிகாரிகள் புகார் அளிக்க தற்போது அந்த கொள்ளையர்களை காவலர்கள் தேடி வருகிறார்கள்.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Bihar, Theft

    அடுத்த செய்தி