• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பணமே இல்ல.. இந்த வீட்ட எல்லாம் எதுக்கு பூட்டுறீங்க  – கலெக்டருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற  திருடர்கள்

பணமே இல்ல.. இந்த வீட்ட எல்லாம் எதுக்கு பூட்டுறீங்க  – கலெக்டருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற  திருடர்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கலெக்டர் வீட்டுக்கு திருட வந்த கொள்ளையர்கள் அங்கு எதிர்பார்த்த பணம் இல்லாததால் கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

  • Share this:
    மத்திய பிரதேசத்தில் அரசு அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் வீட்டில் எதிர்பார்த்த பணம் இல்லாத விரக்தியில் கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

    மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் கதேகான் பகுதியில்  துணை- பிரிவு மாஜிஸ்திரேட்டாக  இருப்பவர் திரிலோச்சின் கவுர். இவருக்கும் சொந்தமான வீடு தேவாஸ் மாவட்டத்தில் உள்ளது. பணியின் காரணமாக கதேகான் பகுதியில் தங்கியுள்ளார். இருப்பினும் அடிக்கடி தேவாஸ் பகுதியில் தனது வீட்டுக்கு சென்று வருவார். கடுமையான பணி சூழல் காரணமாக கடந்த 15 நாள்களாக இவர் தேவாஸ் பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்கு செல்லவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்தவீட்டுக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    நகரின் முக்கியப்பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் பூட்டின் உடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்து உள்ள சென்று பார்த்துள்ளார்.வீட்டில் இருந்த பொருள்கள் எல்லாம் கலைந்து இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது.

    Also Read: காசு கொடுத்தால் சர்வே பண்றேன் - லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கிய சர்வேயர்

    அந்த கடிதத்தில், அவரை குறிப்பிட்டு, பணமோ, விலை மதிப்புமிக்க பொருள் எதுவும் வீட்டில் இல்லை  இந்த வீட்டை எதுக்கு பூட்டி வைத்திருக்கிறீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட வீடு என்பதை அறிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப்பகுதியில் அரசு அதிகாரிகள், நீதிபதிகள், எம்.பியின் வீடு அமைந்துள்ளது. இதனையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Also Read: பெற்றோர்களே உஷார்.. அம்மா குளிப்பதை இன்ஸ்டாவில் தவறுதலாக லைவ் செய்த குழந்தை – சங்கடமான நிகழ்வை பகிர்ந்த பெண்

    இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள்,” இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். வீட்டில் இருந்த 30000 ரூபாய் ரொக்கம், மற்றும் சில தங்க நகைகளை கொள்ளையர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். சனிக்கிழமை இரவு   மாஜிஸ்திரேட் வீட்டுக்கு வந்தபோதுதான் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் கைப்பட எழுதி கடிதம் சிக்கியுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: