ஹோம் /நியூஸ் /இந்தியா /

பக்தி பரவசம்.. கோயிலில் திருடும்முன் மனமுருகி கடவுளை வேண்டிய திருடன்.. வைரல் சிசிடிவி வீடியோ!

பக்தி பரவசம்.. கோயிலில் திருடும்முன் மனமுருகி கடவுளை வேண்டிய திருடன்.. வைரல் சிசிடிவி வீடியோ!

திருடும் முன் சாமி கும்பிட்ட திருடன்

திருடும் முன் சாமி கும்பிட்ட திருடன்

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு திருடன் கோயிலில் திருடுவதற்கு முன்னாள் சாமியை கைகூப்பி பயபக்தியுடன் வழிபட்டு திருட்டு வேலையை செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India

திருடினாலும் அதுல ஒரு ரூல்ஸ் எதிக்ஸ் பாலோ பண்ணும் சில சுவாரஸ்யமான திருடர்கள் சமூகத்தில் உலவுவதுண்டு. வடிவேலு கூட ஒரு படத்தின் காமெடி காட்சியில், கோயிலுக்கு திருடச் சென்று அதற்கு முன்னர் சாமி கும்பிட்டு சாமியிடமே ஆசீர்வாதம் வாங்கி திருடும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். இதே பாணியில் தான் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு திருடன் கோயிலில் திருடுவதற்கு முன்னாள் சாமியை கைகூப்பி பயபக்தியுடன் வழிபட்டு திருட்டு வேலையை செய்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உள்ள குவாலியர் மாவட்டத்தில் பனிஹர் என்ற கிராமத்தில் ஜெயின் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நள்ளிரவு வேளையில் திருடன் ஒரு நுழைந்துள்ளான். இவன் தனது திருட்டு வேலை தொடங்குவதற்கு முன்பாக மூல விக்ரக சிலையை சில நொடிகள் கைகூப்பி வணங்கினான்.

பின்னர் பூட்டுகளை உடைத்து அங்கிருந்த சில சிலைகள் உண்டியல் பணம் ரூ.2 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றான். இந்த கட்சிகள் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இந்த காட்சிகளை வைத்து திருடனை பிடிக்க காவல்துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இந்தி சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைராலகும் நிலையில், பலரும் அந்த திருடனின் பயபக்தியை பாராட்டியும் கிண்டல் செய்தும் நையாண்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Madhya pradesh, Stealing, Temple, Thief, Viral Video