• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கோயில் உண்டியலில் பணத்தை திருடும் முன் கடவுளிடம் பிரார்த்தனை செய்த திருடன் - சிசிடிவி சுவாரஸ்யம்

கோயில் உண்டியலில் பணத்தை திருடும் முன் கடவுளிடம் பிரார்த்தனை செய்த திருடன் - சிசிடிவி சுவாரஸ்யம்

Theft in Temple

Theft in Temple

திருடிய மர்ம நபரை கண்டறிவதற்காக கோவிலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் பார்த்தனர்.

  • Share this:
கோயில் உண்டியலில் இருந்து பணத்தை திருடும் முன் கடவுளிடம் மனமுருகி திருடன் பிரார்த்தனை செய்த சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக இன்று பல இடங்களிலும் சிசிடிவி கேரமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வீடுகள், கோயில்கள் என சிசிடிவி கேமராக்கள் பல இடங்களிலும் பொருத்தப்படுகின்றன. இந்த சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் திருடர்களை பிடிப்பது காவல்துறையினருக்கு மிகவும் சுலபமான ஒன்றாக மாறிவிட்டது. அதே நேரத்தில் சிசிடிவி கேமராக்களால் பல சுவாரஸ்ய சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்த வண்ணமாக உள்ளது.

அந்த வகையில் திருட்டு சம்பவம் ஒன்றின் போது திருடன் செய்த சுவாரஸ்ய நிகழ்வு சிசிடிவி கேமரா மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதில் கோயிலில் நுழைந்த திருடன் ஒருவன் உண்டியலில் இருந்த பணத்தை திருடும் முன் சுவாமி பிரகாரம் முன்னர் பயபக்தியாக நின்று கொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Also read:   செக்ஸ் மட்டுமே தேவை, உன்னை காயப்படுத்த விரும்பவில்லை - பாலியல் கொடூரன்

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரின் கோபத் எனும் பகுதியில் உள்ள ஹனுமன் கோயிலில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்கிருந்த கோவில் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றார். இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி திருடிய மர்ம நபரை கண்டறிவதற்காக கோவிலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் பார்த்தனர். அப்போது கோவிலில் நுழைந்த திருடன், உண்டியல் பணத்தை திருடும் முன் பயபக்தியுடன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதனிடையே கோவிலில் திருடிய நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். உண்டியலில் இருந்து திருடிய 1000 ரூபாயை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: