கோயிலில் திருடும் முன் பூஜை நடத்தும் திருடன்... வீடியோ!

வீடியோகாட்சி

சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ காட்சி பரவி வருகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கோயிலில் திருடச் சென்ற திருடன் ஒருவன் அங்கு கடவுள் முன் பிரார்த்தனை செய்த பின்னர் திருடும் வீடியோ காட்சியை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

  ஹைதராபாத்தில் உள்ள துர்கா பவானி கோயிலில் கடந்த புதன்கிழமை மாலை திருட்டு நடந்துள்ளது. ஹைதரபாத் நகரின் முக்கிய வணிக வீதியில் உள்ளது இந்தக் கோயில். இக்கோயிலினுள் திருட வந்த நபர் கடவுளை நீண்ட நேரமாக வணங்குகிறார்.

  பின்னர் தோப்புக்கரணம் போட்டு சுற்றிப் பார்க்கிறார். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதி செய்துகொண்ட பின்னர் விக்ரகத்தின் தலையிலிருந்த கவசத்தை எடுக்க முயல்கிறார். நீண்ட நேர முயற்சிக்குப் பின் வெள்ளி கிரீடத்தைத் திருடி மீண்டும் கடவுளை வணங்கிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

  கோயில் திறந்திருக்கும் போதே உள்ளே நுழைந்து திருடிச்செல்லும் அந்நபரை போலீஸார் தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ காட்சி பரவி வருகிறது.   

  மேலும் பார்க்க: 6 மாத ஹாங்காங் போராட்டம்... கைதான மிகவும் இளம் போராளி...!
  Published by:Rahini M
  First published: