”யாரு வீடுனு தெரியாம வந்துட்டேன்... மன்னிச்சிருங்க...” சுவரில் எழுதி வைத்து ஒரு ‘பெக்’ மட்டும் போட்டுச் சென்ற திருடர்

”யாரு வீடுனு தெரியாம வந்துட்டேன்... மன்னிச்சிருங்க...” சுவரில் எழுதி வைத்து ஒரு ‘பெக்’ மட்டும் போட்டுச் சென்ற திருடர்
  • News18
  • Last Updated: February 20, 2020, 4:17 PM IST
  • Share this:
’என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று ராணுவ வீரரின் வீடு என்றறிந்ததும் சுவரில் திருட வந்தவர் எழுதி வைத்துள்ள சுவாரஸ்ய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. 

கொச்சி அருகே திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் 5 கடைகளில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கடையை ஒட்டி முன்னாள் ராணுவ வீரர் ஐசக் என்பவரின் வீடு இருந்துள்ளது.

அந்த வீட்டிலும் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததால், இங்கும் கொள்ளை நடந்திருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார், பக்கத்து வீடுகளில் விசாரித்தபோது, அவர் வெளிநாடு சென்றிருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.


அப்போது வீட்டின் உட்பகுதி சுவரில், மலையாளத்தில் சில வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அதில், “இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் உள்ளே நுழைந்துவிட்டேன். கடைசி நேரத்தில் தான் ராணுவ வீரரின் வீடுஎனக்கு  தெரிந்தது. அதுவும் அவரின் தொப்பியை வைத்துதான் அதையே கண்டுபிடித்தேன். தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே வந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் வீட்டில் நகை உள்ளிட்ட எந்த விலையுயர்ந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்படவில்லை. ராணுவ வீரரின் வீடு என்பதால் கண்டிப்பாக அங்கு மது இருக்கும் என்றறிந்த திருடன் பீரோவில் இருந்த மது பாட்டில் ஒன்றை மட்டும் எடுத்து அதிலும் ஒரு ‘பெக்’ மட்டும் போட்டுவிட்டு போயுள்ளார் அந்த நியாய திருடர்.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்