கோவில் நகைகளை திருடிய இளைஞர் ஒருவர் சுவரின் ஓட்டையில் இருந்து வெளியேற முடியாமல் கையும் களவுமாக சிக்கிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜாடுபுடி கிராமத்தில் கிராம தேவதையான எல்லாம்மா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பாப்பாராவ் என்பவர் நேற்றைய தினம் சுவற்றில் ஓட்டை போட்டு, உள்ளே அம்மனின் கழுத்தில் இருந்த நகைகளை திருடிவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, கோவிலுக்குள் சென்ற ஓட்டை வழியாகவே, மீண்டும் வெளியே வர நுழைந்துள்ளார். அப்போது, துரதிர்ஷடவசமாக அவரது பாதி உடல் அந்த ஓட்டையில் சிக்கிக்கொண்டது. எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என ஏதேதோ முயற்சித்துள்ளார். அவரின் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
காதல் தோல்வி: இளம்பெண் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை!
கையில் கோவிலில் திருடிய நகைகளுடன் அசைய கூட முடியாமல் சிக்கிக்கொண்ட அந்த நபர், ஒருகட்டத்தில் செய்வதறியாது கத்தி கூச்சலிட ஆரம்பித்தார். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அவரின் கதறல் சத்தம் அக்கம் பக்கம் இருப்பவர்களின் காதுகளில் விழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, அந்த நபர் சுவற்று ஓட்டையில் சிக்கியிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, அவரை சுவற்று ஓட்டையில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளனர். பின்னர் அவருக்கு தண்ணீர் கொடுத்து இளைப்பாறவும் செய்துள்ளனர்.இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.
கோவில் நகையை திருட முயன்று கையும் களவுமாக அங்கேயே சிக்கியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதேவேளையில் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.