காஷ்மீரில் மூன்று காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் போருக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்ற நிலையில், மூன்று காவலர்களை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள் அவர்களை படுகொலை செய்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, செப்டம்பர் 25-ம் தேதி அமெரிக்காவில் நடைபெறவிருந்த இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்பை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்தது.
இது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்த பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் பதில் எதிர்மறையாகவும் ஆணவமாகவும் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், சாதாரண மனிதர்களாக இருந்து பெரிய பதவிகளுக்கு வந்த பலரை தனது வாழ்வில் பார்த்துள்ளதாகவும், அவர்களுக்கு பெரிய விவகாரங்களை கையாள்வதற்கான தெளிவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், ஜெய்ப்பூரில் ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ தளபதி, பிபின் ராவத், பாகிஸ்தானின் காட்டுமிராண்டிதன செயலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நேரமிது என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Army Chief General Bipin Rawat, Indian Army Commander Bipin Rawat, Pakistan Army, Pakistan News in Tamil