சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் ஒரு அடி... பாஜகவுக்கு தாவிய 4 தெலுங்கு தேசம் எம்.பி.க்கள்...!
"நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு தாவும் போது, கட்சி தாவல் தடைச்சட்டத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது"

சந்திரபாபு நாயுடு
- News18
- Last Updated: June 21, 2019, 7:50 AM IST
முதல்வர் பதவியை இழந்த ஒரு மாதத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்த அடியாக, அவரது கட்சியைச் சேர்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியை ஜெகன் மோகன் ரெட்டியிடம் பறிகொடுத்தது. 175 தொகுதிகளில் 151-ல் அக்கட்சி படுதோல்வி அடைந்தது.
மக்களவை தேர்தலிலும் 3 இடங்களில் மட்டுமே தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது. இதனால், கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் அக்கட்சியின் 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். மொத்தம் 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தெலுங்கு தேசம் கட்சி கொண்டிருந்த நிலையில், 4 பேர் பாஜகவில் இணைந்து பின்னர் சபாநாயகர் வெங்கையா நாயுடுவை சந்தித்து தங்களை பாஜக எம்.பி.க்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு தாவும் போது, கட்சி தாவல் தடைச்சட்டத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி.க்கள் கட்சி தாவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, “அவர்களுக்கு (கட்சி தாவிய எம்.பி.க்கள்) தனித்தனி அஜெண்டா இருக்கிறது. அவர்கள் சென்றதால் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் பல மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், மற்ற கட்சி உறுப்பினர்களை வளைக்கும் பணியில் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியை ஜெகன் மோகன் ரெட்டியிடம் பறிகொடுத்தது. 175 தொகுதிகளில் 151-ல் அக்கட்சி படுதோல்வி அடைந்தது.
மக்களவை தேர்தலிலும் 3 இடங்களில் மட்டுமே தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது. இதனால், கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் அக்கட்சியின் 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.