Home /News /national /

எப்போது ஆட்சி கவிழும் என்ற பயத்திலேயே ராஜஸ்தான் அரசு செயல்படுகிறது - அமித்ஷா

எப்போது ஆட்சி கவிழும் என்ற பயத்திலேயே ராஜஸ்தான் அரசு செயல்படுகிறது - அமித்ஷா

ராஜஸ்தானில் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டாவது நாளாக நேற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    எப்போது ஆட்சி கவிழும் என்ற பயத்திலேயே ராஜஸ்தான் அரசு செயல்படுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கேலி செய்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜஸ்தான் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள ஜெய்சால்மர் நகரில் ரோகிடாஷ் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று அவர்களை சந்தித்துப் பேசினார். அதன்பின் வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டார்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா நேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கடந்த வருடம் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை கவிழ்க்க முயற்சித்ததாக முதல்வர் அசோக் கெலாட் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக ஒருபோதும் ஆட்சியை கலைக்காது என்றும், 2023ம் ஆண்டு பெரும்பான்மையுடன் ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கும் என்றார்.

    மேலும், இங்கு ஆட்சி செய்து வரும் பயனற்ற மற்றும் ஊழல் கறைபடிந்த அசோக் கெலாட்டின் காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். வரும் சட்டசபை தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

    Also read: பெண்களுக்கு ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்படும்... அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி

    அதேபோல், எப்போது ஆட்சி கவிழும் என்ற பயத்திலேயே இந்த அரசு இருக்கிறது. யார் உங்கள் ஆட்சியை கவிழ்க்க போகிறார்? பாஜக ஒருபோதும் உங்கள் ஆட்சியை கவிழ்க்காது என்று அவர் கூறினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Amith shah, BJP, Rajasthan

    அடுத்த செய்தி