ஜூன் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே நான்கு பகல் நேர சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில்கள் ஜுன் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

ஜூன் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
ரயில் (கோப்புப்படம்)
  • Share this:
கொரோனா தொற்று காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 100 ரயில்களை இயக்கவுள்ளதாக ரயில்வேத்துறை சமீபத்தில் அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் இயங்கும் ரயில்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இதற்கு மாநில அரசு ரயில் போக்குவரத்தை துவக்க அனுமதி வழங்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ரயில் சேவையை துவக்க தமிழக அரசு தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 4 பகல் நேர ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே அனுமதி கோரியது. இந்த ரயில்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்-மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயில், மதுரை- விழுப்புரம் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில், திருச்சி - நாகர்கோவில் அதிவிரைவு ரயில், கோயம்புத்தூர் - காட்பாடி இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் ஆகிய ரயில்கள் ஜுன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.


கோயம்புத்தூர்-மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய்கிழமை தவிர அனைத்து நாட்களும் இயக்கப்படும். மற்ற மூன்று ரயில்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also see...

திருமணத்தில் ஜாலியாக நடனமாடும் மஹத் - பிராச்சி தம்பதி - வீடியோ
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading