ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் தயாரித்த இந்த 4 இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலி.. ஹரியானா அரசுக்கு மத்திய அரசு அலெர்ட்!

இந்தியாவில் தயாரித்த இந்த 4 இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலி.. ஹரியானா அரசுக்கு மத்திய அரசு அலெர்ட்!

இருமல் மருந்து

இருமல் மருந்து

Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகிய மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaSwitzerlandSwitzerland

  காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்திற்கு இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்தே காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அது குறித்த விசாரணையை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

  ஆப்ரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துக்கு இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்டது காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் தயாரித்த 4 இருமல் மற்றும் சளிக்கான மருந்துகளை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு, இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. மேலும், மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இந்த மருந்துகள் அதிகளவில் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

  ஹரியானாவை தலைமையிடமாக கொண்ட மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் தயாரித்த Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகிய மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

  காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால் உயிரிழந்த நிலையில், கடந்த ஜூலை 19 அன்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, காம்பியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் மருத்துவமனைகளில் பாரசிட்டாமால் சிரப்பின் பயன்பாட்டை நிறுத்துமாறு கூறியிருந்தது.

  நோயாளிகளுக்கு இந்த மருந்துகளால் தீங்கு ஏற்படாமல் இருக்க, இவற்றைப் புழக்கத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று உலக சுகாரதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதானோம் எச்சரித்துள்ளார்.

  இதையும் வாசிக்க: 2027-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலுள்ள மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கையை 220ஆக உயர்த்த திட்டம்.!

  இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவலில், தீங்கு விளைவித்த மருந்துகள் குறித்து கடந்த 29- ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததாக குறிப்பிட்டுள்ளது. உடனடியாக ஹரியானா, அரசை தொடர்புக் கொண்ட மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Banned, Medicine, WHO