Home /News /national /

பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை.. பிரதமர் திரும்பி சென்றதற்கு வருந்துகிறேன்: பஞ்சாப் முதல்வர் சன்னி

பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை.. பிரதமர் திரும்பி சென்றதற்கு வருந்துகிறேன்: பஞ்சாப் முதல்வர் சன்னி

எந்தவொரு இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

எந்தவொரு இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

எந்தவொரு இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

    பாதுகாப்புக் குறைபாடு எதுவும் இல்லை, பிரதமர் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் சில நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை அங்கு சென்றார். முதலில் பதிண்டாவுக்கு வந்த மோடி, அங்கிருந்து தேசிய தியாகிகள் நினைவிடம் அமைந்துள்ள ஹுசைனிவாலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது, வெளிச்சம் குறைவு, தொடர் மழை காரணமாக, சாலைப் பயணத்தை தவிர்த்து ஹெலிகாப்டரில் மோடி செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து, வானிலை சரியாக அமையாத காரணத்தால் சாலை மார்க்கமாக மோடி செல்வதற்கு பயணத்திட்டம் மாற்றப்பட்டது. அதற்கு முன்பாக, பஞ்சாப் டிஜிபியிடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பிரதமர் மோடி செல்லக் கூடிய வழியில் மிகச்சரியாக உள்ளதென உறுதி செய்யப்பட்டிருந்தது.

    Also read:  மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள்

    இந்நிலையில் மோடி செல்லும் வழியில், விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சாலைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதன்காரணமாக பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார். தொடர்ந்து, போராட்டத்தினரை அப்புறப்படுத்த முடியாததால், பிரதமர் மோடி தனது நிகழ்ச்சியை ரத்து செய்து அங்கிருந்த திரும்பி சென்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், எந்தவொரு இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

    இதற்கு பொறுப்பேற்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்ஜித் சிங் சன்னி அளித்துள்ள விளக்கத்தில், போராட்டக்காரர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு முன்பாகவே பிரதமரின் கான்வாய் நிறுத்தப்பட்டது. பிரதமர் செல்லும் பாதையில் போராட்டம் நடத்தியவர்கள் விவசாயிகள். அவர்கள் வன்முறையின்றிதான் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

    எந்தப் போராட்டத்தையும் கைவிட வைக்க குறைந்தது 10 முதல் 20 நிமிடங்கள் ஆகும். இது குறித்து பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது, மேலும் அவருக்கு வேறு மாற்று வழியும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவர் திரும்பி செல்வதை தேர்வு செய்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Also read:   வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏவுக்கு ஷாக் கொடுத்த தொகுதி மக்கள்..
    Published by:Esakki Raja
    First published:

    Tags: PM Modi, Punjab

    அடுத்த செய்தி