• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வெற்றிக்கான ஒரே வழி தேடல் மட்டுமே – மத்திய அமைச்சர் ராத்தோர்

வெற்றிக்கான ஒரே வழி தேடல் மட்டுமே – மத்திய அமைச்சர் ராத்தோர்

ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர்.

ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர்.

நீங்கள் சவால்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் வளர்கிறீர்கள் என்று அர்த்தம். சவால்கள் உங்களை நோக்கி வரும்போது, நீங்கள் முன்னேறிச் செல்வதாக உங்களுக்கு நீங்களே கூறிக் கொள்ளுங்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வெற்றிக்கான ஒரே வழி, உங்களிடமுள்ள தேடல் மட்டுமே என்று மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர் தெரிவித்தார்.

    இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நிகழ்ச்சியொன்றில் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர் பங்கேற்றுப் பேசினார். அதில், ``வெற்றிக்கான ஒரே வழி, உங்களிடமுள்ள தேடல் மட்டுமே. வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பு, தேடல், வேட்கை இருந்தால் வெற்றி நிச்சயம். இதை அடைவதற்கு நமக்கு ஆற்றல் தேவை. அது எந்த மாதிரியான ஆற்றல் என்பதை நீங்கள்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

    ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு இணையான மற்றும் எதிர்வினை உண்டு என்று நியூட்டனின் மூன்றாம் விதி கூறுகிறது. இது எனது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியது. எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்கள் என்னை ஏறி மிதித்தார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு என்னால் மேலே வர முடிந்தது. அவ்வாறு மிதித்தவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மட்டும் அவ்வாறு செய்திருக்காவிட்டால், என்னால் இந்த இடத்தை அடைந்திருக்க முடியாது.

    உங்களது சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும்போது, உங்களுக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும். சவாலான விஷயங்களுக்கு முடிவே கிடையாது. நீங்கள் சவால்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் வளர்கிறீர்கள் என்று அர்த்தம். சவால்கள் உங்களை நோக்கி வரும்போது, நீங்கள் முன்னேறிச் செல்வதாக உங்களுக்கு நீங்களே கூறிக் கொள்ளுங்கள்.

    எப்போதுமே, நேர்மறையான மனநிலையை பழக்கிக் கொள்ளவும். நம்மைச் சுற்றிலும் எதிர்மறையான விஷயங்கள் பல இருகின்றன. இதன் காரணமாக, நம்மால் முன்னேற முடிவதில்லை. எனினும், நீங்கள் நேர்மறையான சிந்தனையை வளர்த்துக் கொண்டால் உங்களால் முன்னேற முடியும்’’ என்று பேசினார் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: