Home /News /national /

ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை.. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை கழற்றிவிட்டு கூட்டணி அமைக்கும் மம்தா

ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை.. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை கழற்றிவிட்டு கூட்டணி அமைக்கும் மம்தா

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளில் பிரதமர் முகமாகவும் மம்தா பானர்ஜியை முன்னிலைப்படுத்தும்  முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத வலுவான கூட்டணியை அமைக்க மம்தா முயன்றுவருகிறார்.

மேலும் படிக்கவும் ...
    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை என்று கூறினார்.

    மேற்குவங்க சட்டப்பேரவைக்காக தேர்தல் இந்த ஆண்டின் மத்தியில் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரு வெற்றியை பெற்றது. காங்கிரஸ் கட்சி அண்மை காலமாக சறுக்கல்களை சந்தித்துவரும் சூழலில் பாஜகவுக்கு எதிரான வலுவான தலைவராக தன்னை முன்னிறுத்தும் முயற்சியில் மம்தா ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக  கோவா சட்டப்பேரவை தேர்தலிலும் திர்ணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

    பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பிற துறை பிரபலங்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளில் பிரதமர் முகமாகவும் அவரை முன்னிலைப்படுத்தும்  முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

    இது ஒருபக்கம் இருக்க, முக்கிய தலைவர்களையும் மம்தா பானர்ஜி சந்தித்து வருகிறார். பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சில தினங்களுக்கு முன்பு மம்தாவை சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில், இன்று மும்பை சென்ற மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார்.

    இதையும் படிங்க: வேளாண் போராட்டத்தில் விவசாயிகள் இறந்ததாக பதிவுகள் இல்லை: மத்திய அரசு


    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, ’தற்போதைய பாசிசத்திற்கு எதிராக யாரும் போராடாததால், உறுதியான மாற்றுப் போக்கை உருவாக்க வேண்டும். இதை யாரும் தனியாக செய்ய முடியாது. யார் எந்த இடத்தில் பலமாக இருக்கிறாரோ அவர்தான் போராட வேண்டும். சரத் பவார் மூத்த தலைவர், நான் அரசியல் மரியாதையாக  அவரை சந்தித்து ஆலோசிக்க வந்தேன்’ என்றும் அவர் தெரிவித்தார். 

    பாஜகவுக்கு எதிராக இந்த மாற்று அணியில் காங்கிரஸ் இடம் பெறுமா என்ற கேள்விக்கு, போராடக்கூடிய வலுவான மாற்று நமக்குத் தேவை. யாராவது சண்டையிட விரும்பவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்? அனைவரும் ஒன்றிணைந்து களத்தில் போராட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்.

    மேலும் படிங்க: ஒமைக்ரான் அச்சுறுத்தல்: டிசம்பர் 15ல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய இந்தியா!


    ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத் பவார் தலைமை வகிப்பாரா என்ற கேள்விக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றால் என்ன. அப்படி எதுவும் இல்லை. அனைத்து சிக்கல்களையும் நாங்கள் அகற்றுவோம். ஒரு வலுவான மாற்று வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என மம்தா பதில் அளித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Congress, Mamata banerjee, UPA

    அடுத்த செய்தி