ஹோம் /நியூஸ் /இந்தியா /

தாஜ்மகாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!

தாஜ்மகாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!!

தாஜ்மகால் , ஷாஜகான்

தாஜ்மகால் , ஷாஜகான்

தாஜ்மஹாலின் உண்மைத் தன்மை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்டால், இந்திய தொல்லியல் துறை சரியானப் பதில்களை வழங்கவில்லை என்றும் மனுவில் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தாஜ்மகாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடையாது என்பதால் உண்மை தன்மையை கண்டறிய குழுவை அமைக்ககோரி உச்சநீதிமன்றத்தில்  ரஜினிஸ் சிங்  என்பவர் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

  இது தொடர்பாக ரஜினிஸ் சிங் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாஜ்மஹாலை மும்தாஜ் நினைவாக ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், எனவே, இது குறித்து உண்மை தன்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கையை அந்த மனுவில் வைத்துள்ளார்.

  உயர்நீதிமன்றத்தில் தாஜ்மஹாலுக்குள் இருக்கும் 22 ரகசிய அறைகளை திறந்து ஆய்வு நடத்த வேண்டும் என்று வைத்திருந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பாக முன்வைக்கவில்லை. தாஜ்மஹாலின் உண்மைத் தன்மை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்டால், இந்திய தொல்லியல் துறை சரியானப் பதில்களை வழங்கவில்லை என்றும் மனுவில் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

  Also Read:  சொந்த ஊர் போறீங்களா.. கோயம்பேடு போகும் முன் இதை படிங்க!!..

  ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடாக ரஜினிஸ் சிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Supreme court, Taj Mahal