மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார், அதில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் மாத சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்ட பலருக்கும், மிகுந்த எதிர்பார்ப்பாக இருப்பது. தனிநபர் வருமான வரி உச்சவரம்பு தொடர்பான அறிப்பு. இதில் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் எந்த மாற்றமும் செய்யப்பட்வில்லை.
அதே சமயம், 70 வயதைக் கடந்த பென்ஷன் பெறும் முதியவர்கள் வருமானவரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களாக, அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3,500 கி.மீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட இருப்பதாக நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் படிக்க... Budget 2021 | சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இதேபோல, சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.