கனமழையால் வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழையால் வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  • News18
  • Last Updated: August 7, 2019, 9:24 AM IST
  • Share this:
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கர்நாடகா, டெல்லி, சட்டீஸ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

மும்பையில் கனமழையால் ரயில் சேவை பாதிப்பு


மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக கனமழை கொட்டி வருகிறது. மும்பையில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை- சென்னை, மும்பை- பாட்னா உட்பட 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

6 பாலங்கள் தற்காலிகமாக மூடல்

புனே-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோலாப்பூரில் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து முடங்கியது. சங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 700-க்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். முலா, முத்தா ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டோடுவதால் ஆறுகளின் குறுக்கே உள்ள 6 பாலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.புனே மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புனே மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

புனே மாவட்டத்தில் ரெட் அலர்ட்

புனே, சடாரா, நாசிக், கோலாப்பூர், பால்கர் மற்றும் தானே மாவட்டங்களில் வியாழக்கிழமை வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனே மாவட்டத்திற்கு நாளை முதல் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகர்நாடகாவில் கனமழையால் ரயில் சேவை முடக்கம்

இதேபோன்று கர்நாடகாவில் சிவமோகா, குடகு, உடுப்பி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. வட கர்நாடகாவில் கனமழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிவமோகாவில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் 200-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகமண்டலா-தலைகாவிரி இடையே போக்குவரத்து பாதிப்பு

கஜனூர் நீர்தேக்கத்தில் இருந்து 76,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் துங்கா ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகமண்டலா-தலைகாவிரி இடையே கனமழையால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

உடுப்பியில் சூறைக்காற்றுடன் கனமழை

உடுப்பியில் கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சேதமடைந்தன. குடகு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு கர்நாடகாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் பலத்த மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் காலை முதலே பரவலாக மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோன்று உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர், அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தை

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading