முகப்பு /செய்தி /இந்தியா / தொழிலாளர்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கவில்லை - சோனியா குற்றச்சாட்டுக்கு ரயில்வே அமைச்சகம் பதில்

தொழிலாளர்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கவில்லை - சோனியா குற்றச்சாட்டுக்கு ரயில்வே அமைச்சகம் பதில்

கோப்புப்படம்

கோப்புப்படம்

கட்டணத்தில் 15 விழுக்காட்டை மாநில அரசுகளும் கொடுக்கலாம் அல்லது தொழிலாளர்களிடம் இருந்தும் வசூலிக்கலாம் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

  • Last Updated :

பிறமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வெளிமாநிலங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான சிறப்பு ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டினார். மேலும் இந்த கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகளே வழங்கும் என்றும் சோனியாகாந்தி அறிவித்தார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ரயில்வே அமைச்சகம், மத்திய அரசு தொழிலாளர்களின் ரயில்வே கட்டணத்தில் 85 விழுக்காடு தொகையை மானியமாக அளிப்பதாகவும், எஞ்சிய 15 விழுக்காட்டை மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 விழுக்காட்டை மாநில அரசுகளும் கொடுக்கலாம் அல்லது தொழிலாளர்களிடம் இருந்தும் வசூலிக்கலாம் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

First published:

Tags: CoronaVirus, Sonia Gandhi, Southern railway